தெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர்  சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், எரியுண்ட குறித்த வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினர்  விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தீ எப்படி ஆக்கிரமித்தது, அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையை அறியவும் மரணமடைந்த நால்வரின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதை உறுதி செய்துகொள்ளவுமே மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீட்டின் சமயலறையை ஒட்டியுள்ள பெண்ட்ரி கபட் அருகே இருந்த இலத்திரனியல் அவன் மேல் நவீன கையடக்கத் தொலைபேசியொன்று சார்ஜில் போடப்பட்டிருந்துள்ளமையும் இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அதன் ஊடாக தீ பரவியதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இந்நிலையிலேயே வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி சந்தேகங்களை மேலும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.