என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சேகாவிற்கும் தொடர்புள்ளதாக தகவல்- சிறிசேன

Published By: Rajeeban

28 Oct, 2018 | 08:00 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக  தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் காரணமாகவே நான் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரணைகளின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவிற்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தன எனினும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை மறைத்துவிட்டனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் போது வேறு சில முக்கிய நபர்களுக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்தது என தெரிவித்துள்ள சிறிசேன விசாரணைகள் இடம்பெறுவதால் நான் மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.

முழுமையான விபரங்கள் தெரியவரும்போது மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33