ரி-20 யிலிருந்து கப்டன் கூல் ஓய்வு?

Published By: Digital Desk 4

27 Oct, 2018 | 11:08 AM
image

இந்தியா விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் உடனான  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்ருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய ஜாம்பவான்களில் ஒருவராக இருக்கும் தோனி. தோனி 93 ரி- 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இந்நிலையில் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் ரி- 20 போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழுவின் தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் காப்பாளர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி- 20 போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் காப்பாளராக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி- 20 போட்டியிலிருந்து தோனி முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், முழுமையாக ஓய்வு பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

இதேபோல், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி-20 போட்டியில் இருந்து அணி தலைவர் விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும், அவருக்கு பதிலாக பொறுப்பு தலைவராக ரோஹித் ஷர்மா விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41