தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடக்கும்புர – ஒக்ஸ்ப்போட் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது. 

இன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக 50 ஏக்கர் கொண்ட இந்தப்பகுதியில் சுமார் 30 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாராவது இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்த தலவாக்கலை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த தீயினால் தேயிலை செடிகளும் கருகியுள்ளது.

எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 30 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)