விறகு சேகரிப்பதற்காக காட்டுக்கு சென்ற 74 வயது மூதாட்டி ஒருவர் காட்டுத் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் ஒன்று ஹேவாஹெட்டை ஹோட் கீழ்ப்பிரிவில் இடம் பெற்றுள்ளது. 

மூதாட்டியின் சடலம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

செலம்பரம் கிட்ணம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவராவார். 

எனினும் மேற்படி மூதாட்டி உண்மையாகவே விறகு சேகரிப்பதற்கு காட்டுக்குச் சென்றாரா என்பது தொடர்பிலும் இவரது மரணம் தொடர்பிலும் பொலிஸார்  விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி மூதாட்டி கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் காணாமல் போயிருந்த நிலையிலேயே நான்கு தினங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.