கோத்தபாயவை விமர்சிக்கும் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து விலகுவாரா?

Published By: Rajeeban

26 Oct, 2018 | 04:42 PM
image

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொது எதிரணியின்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவதை குமார வெல்கம கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளையும் விமர்சித்து வரும் வெல்கம தான் மகிந்த ராஜபக்சவை மாத்திரம் ஆதரிப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.

வெல்கம பிரிந்து செல்வார் என நான் நினைக்கவில்லை அவர் இது பற்றி என்னிடம் பேசவில்லை என  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குமார வெல்கம தெரிவித்துவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளிற்காக  அவரை எச்சரிக்க வேண்டுமா என நிருபர் ஒருவரின் கேள்விக்கு  அதற்கான அவசியமில்லை, அவர் ஒரு சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவரிற்கு விசேட ஆலோசனைகள் தேவையில்லை  என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

என்னை பொறுத்தவரை வெல்கம தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15