ஜனாதிபதி கொலை சதி- நாலகவின் சட்டத்தரணி தெரிவிப்பது என்ன?

Published By: Rajeeban

26 Oct, 2018 | 03:55 PM
image

ஜனாதிபதி கொலை சதி விவகாரத்தில் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை கைது செய்துள்ளமை சட்டத்திற்கு முரணான விடயம்  என அவரது சட்டத்தரணி அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாலக டி சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளஅவரது சட்டத்தரணி  தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு எதிராக கூட பயங்கரவாத தடைச்சட்;டம் பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாலக டி சில்வாவிற்கு எதிராக முறைப்பாடு செய்தவர் சமர்ப்பித்த ஆதாரங்களையும் ஒலிநாடாவில் பதிவான விடயங்கள் குறித்த அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையையும் அடிப்படையாக வைத்தே நாலக டி சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அரச பகுப்பாய்வாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கை மூன்று விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

ஒலிநாடா ஓட்டோ கட்டர் கணணி மென்பொருளை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டுள்ளது, குறிப்பிட்ட ஒலிநாடாவை ஆய்விற்கு உட்படுத்துவதற்கான தொழில்நுட்ப திறன் அரச பகுப்பாய்வாளரிற்கு இல்லை என அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை தெரிவி;ப்பதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

ஒலிநாடா உரையாடல்கள் செப்டம்பர் 9 ம் திகதி பதிவாகியுள்ளன என பகுப்பாய்வாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள  சட்டத்தரணி  அஜித் பத்திரன எனினும் இந்த சம்பவம் அதற்கு முன்னர் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சான்றுகள் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் கீழ் ஒலிநாடாவை முக்கிய ஆதாரமாக பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட ஒலிநாடா கொலை முயறசிகள் குறித்து  எதனையும் தெரிவிக்கவில்லை என நாலக டி சில்வாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கொலை சதி முயற்சிகள் குறித்து வெளியாகும் தகவல்கள் பொய்யானவை  புனையப்பட்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தின் சாட்சியமாக காணப்படும் நபரின் நம்பகத்தன்மை குறித்து நீதிபதியி;ன் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன், என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி, முக்கிய சாட்சியான  நாமல் குமார விமானப்படையில் இணைவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

நாமல் குமார குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  பெறப்பட்ட ஏனைய விபரங்கள் உள்ளன இவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்  என  நாலக டி சில்வாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46