தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரம் : உடனடி தீர்வாக வாழ்க்கைப்படி வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்

Published By: Daya

26 Oct, 2018 | 03:00 PM
image

கூட்டு ஒப்பந்தம் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தினை அரசாங்கம் தட்டிக்கழித்து விட முடியாது என ஈழக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி தேர்தல்கள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

உடனடி தீர்வை வழங்கும் முகமாக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ள வாழ்க்கைப்படியினை அவர்களுக்கு மீண்டும் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமெனக்கோரி தோட்டத்தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு அதரவாக நடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக தலைநகரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டு வலியுறுத்தல்களையும் செய்துள்ளார்கள். இவ்வாறான அழுத்தமளிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அரசியல் சாயமின்றி இடம்பெற வேண்டும் என்பதோடு அதற்கான எமது பூரண ஆதரவையும் வழங்குவதற்கு தயராகவே உள்ளோம்.

1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் 22தனியார் கம்பனிகளுக்கு 99வருட குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்க்கைப்படியும் நிறுத்தப்பட்டது.

அதனையடுத்த காலங்களில் கூட்டு ஒப்பந்த விவகாரம் ஆண்டு தோறும் நடைபெறும் ஒருவிழா போன்றாகிவிட்டது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இழுபறிக்கு உள்ளாவதும் ஈற்றில் குறைந்த தொகை அதிகரிப்புடன் இணக்கப்பாட்டிற்கு வருவதும் தான் வாடிக்கையாக உள்ளது.

உண்மையில் கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக அரசதுறை சம்பள பட்டிலுக்குள்ளோ அல்லது தனியார் துறை சம்பள பட்டியலுக்குள்ளோ தோட்டத்தொழிலாளர்கள் உள்வாங்கப்படாது தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசாங்கமே தம்மிடமிருந்து தோட்டங்களை தனியார் துறைக்கு வழங்கியுள்ளது.

மேற்படி தனியார் துறையினால் அரசாங்கம் இதர நன்மைகளைப் பெறுகின்றது என்பதற்காக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வளர்ச்சி கண்டு ஏற்றுமதியில் அதிகளவு வருமானத்தினை ஈட்டித்தருவதற்கு காரணமாக உள்ள பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை நிராகரித்து விட முடியாது.

ஏனவே முதலாளிமார் சம்மேளம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தொழிற்சங்களை உடனடியாக  ஒருமேசைக்கு கொண்டு வந்து தற்போதைய பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அந்தப் பட்டாளி வர்க்கத்தின் நீண்டகால கோரிக்கையை தீர்ப்பதற்காக கொள்கை ரீதியான முடிவொன்றை எட்டவேண்டும்.

இந்தப்பேச்சுக்கள் நிறைவடைவதற்கான காலம் வரையில் உடனடித்தீர்வாக அந்த பட்டாளி வர்க்கத்திற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த வாழ்க்கைப்படியை அரசங்கம் மீளவும் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல்பிரதிநிதிகளை தமது கைக்குள் வைத்துக்கொண்டு அரசாங்கம் இந்த விடயத்தினை தட்டிக்கழிக்க முனையக் கூடாது என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01