மகிந்தவிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்க தயார்- ரணில்

Published By: Rajeeban

26 Oct, 2018 | 03:55 PM
image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தால் அவரிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்க தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியவேளையே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதியின் விஜயராம மாவத்தை மெதமுலான மாற்றும் கார்ல்டன் இல்லங்களிற்கு ஏற்கனவே விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் விசேட அதிரடி படையினரின்  பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக ரணி;ல் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்த்தன முன்னாள் ஜனாதிபதிக்கான அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளதால் அவரின் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டியுள்ளது என முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்கான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சபையில் பொது எதிரணி தெரிவித்ததுடன் உடனடியாக அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே இருந்ததை விடவும் அதிகமான பாதுகாப்பு இப்போதும் வழங்கப்பட்டே உள்ளது, இதற்கு மேலும் பாதுகாப்பு வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ஆராயலாம் என அரசாங்கம் பதில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை 27/2இன் கீழ் விசேட கேள்வி எழுப்பிய பொது எதிரணியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் தினேஷ் குணவர்தன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு குறித்து வினவினார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் கூறுகையில் :- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கான பாதுகாப்பு பல தடவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அவருக்கான பாதுகாப்பு கோரப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதேபோல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மீண்டும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டது.

அதனை அடுத்து அவருக்கு 103 பேர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டனர். இப்போது எதனை பேர் உள்ளனர் என்பதை நான் சபையில் கூற விரும்பவில்லை. அப்போது வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை விடவும் அதிகமானவர்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர். அதனைவிட அவர் வசிக்கும் விஜயராம இல்லம், மெதமுலன இல்லம் மற்றும் கால்ட்டன் இல்லம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பிரத்தியேகமான வழங்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி அவருக்கான அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டதை அடுத்து அவரது வாகனத்துடன்   முன்னும் பின்னும் பயணிக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதையும் தாண்டி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றால் அது குறித்தும் ஆராயலாம் எனக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37