மலையகத்தில் குடும்பக் கட்டுப்பாடு எனும் பெயரில் இன அழிப்பு ? ; மனுத் தாக்கல்

Published By: Digital Desk 7

26 Oct, 2018 | 02:26 PM
image

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களை ஏமாற்றி குடும்­பக்­கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இனப்­ப­ரம்­பலை திட்­ட­மிட்ட வகையில் சீர­ழிப்­ப­தாக தெரி­வித்து மாவட்ட சுகா­தார பிரி­வுக்கு எதி­ராக கொழும்பு மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் புதிய தொழி­லாளர் முன்­ன­ணியின் தலைவர் முர­ளி­ ர­கு­நாதன் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நுவ­ரெ­லியா மாவட்ட பெருந்­தோட்ட பிர­தே­சங்­க­ளுக்கு பொறுப்­பான சுகா­தார திணைக்­க­ளத்தால் குடும்­பக்­கட்­டுப்­பாடு முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இச்­செயல் இனத்தை அழிப்­ப­தற்கான திட்­ட­மிட்ட செயற்­பா­டா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜடேல் என்ற குடும்ப கட்­டுப் ­பாடு நுவ­ரெ­லியா மாவட்ட சுகா­தார அதி­காரி காரி­யா­ல­யத்தில் தாதி­யர்கள் மூலம் பெருந்­தோட்டங்களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

மலை­ய­கத்தில் குழந்தை பிர­ச­வித்­துள்ள பெருந்­தோட்ட தாய்­மாரை மூளைச்­ச­லவை செய்து நீண்ட காலத்­திற்கு குழந்தை பிர­ச­விக்­காமல் இருப்­ப­தற்கும் பின்னர் தேவைப்­படும் நேரங்­களில் ஜடேலை அகற்­றி­விட்டு மீண்டும் குழந்­தையை பிர­ச­விக்க முடியும் என்றும் நய­வஞ்­சகத்­த­ன­மாக ஏமாற்றி ஜடேல் பொருத்­தப்­ப­டு­கின்­றது.

அதன் பிறகு ஜடேலை பொருத்­திக்­கொண்ட தாய்­மார் அடுத்த குழந்­தைக்கு ஜடேலை அகற்­றக்­கோரி குடும்ப நல தாதி­யர்கள் மூலம் பொது சுகா­தார அதி­காரி காரி­யா­ல­யத்தை அணு­கும்­போது தமக்கு ஜடேலை பொருத்­து­வ­தற்கு மட்­டுமே அதி­காரம் இருப்­ப­தா­கவும் ஜடேலை அகற்றும் அதி­காரம் தமக்கு இல்லை என்றும் கையை விரித்­து­வி­டு­வ­தாக பல தாய்மார்  தெரி­வித்­துள்­ளனர்.

ஆகவே இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை நடத்தி பெருந்தோட்டத் தாய்மாருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19