ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டுமெனக் கூறி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம் 

Published By: Daya

26 Oct, 2018 | 01:49 PM
image

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்தும் டயர்கள் ஏறித்தும் பொகவந்தலாவ நகரில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்று  காலை 8 மணியில் இருந்து 11மணி வரை பாரிய ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, பொகவான, குயினா ஜெப்பல்டன் பி.எஸ் ஜெப்பல்டன் , டி.பி.செல்வகந்தை ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 2000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தி கறுப்பு கொடிகளை ஏந்தியும் முன்னெடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கமுடியாவிட்டால் தொழில் அமைச்சர் பதவிவிலக வேண்டும் என கோஷசங்களை எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுப்டடனர் .

குறித்த ஆர்ப்பாடத்திற்கு பொகவந்தலாவ வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்களும் வாகனசாரதிகளும் கலந்து கொண்டனர். தோட்ட தொழிலாளர்களுக்கு 25நாள் கட்டாய வேலை நாட்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 குறித்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறைபோல் எங்களை ஏமாற்றாது இம்முறை ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்திற்கு மாத்திரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடபட வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04