கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

விமல் வீரவன்ச, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முசம்மில், ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.