புவனேஸ், பும்ரா உள்ளே - வெளியேறுகிறார் ஷமி

Published By: Vishnu

26 Oct, 2018 | 10:57 AM
image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி மூன்று போட்டிகளிலும் விளையாடுவதற்கு இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரிலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டியை சமநிலையில் முடித்துள்ளது. 

மேற்கிந்திய அணியினை இந்திய அணி டெஸட் போட்டிகளில் இலகுவாக வீழ்த்தியமையதன் காரணமாக பெரும் நம்புக்கையுடன் ஒருநாள் போட்டிகளை இலகுவாக கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் பெரும் சவால் மிக்கதொன்றாக மாறியுள்ளது. 

இந்நிலையில் கடைசி மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில் முதல் இரண்டு போட்டியில் இடம்பெறாத புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. 

இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது ஒருநாள் போட்டி புனேயில் நாளை மறுதினம் 27 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21