கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த எலி 

Published By: Raam

18 Mar, 2016 | 12:51 PM
image

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் கியாஸ் நிறுவன என்ஜினீயரான  டோனி சுமித்  அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தவேளை அங்கிருந்த ஒரு எலி  வளைக்குள் இருந்து ராட்சத எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்ட டோனி சுமித் அதை விரட்டி பிடித்துக் கொண்டார். 

அந்த எலியின்  வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும்  11½ கிலோ எடையையும்  இருந்தது. பூனையை விட அது பெரிதாக இருந்தது. 

‘‘எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது’’ என்று டோனி சுமித்  கூறினார். இதுவரை உலகிலே பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே இது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right