மறதிக்கு அரணாகும் சுவை

Published By: Digital Desk 4

25 Oct, 2018 | 07:42 PM
image

எம்மில் பலரும் விடுமுறை தினங்களில் அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து பொழுதைக் கழிப்போம். 

அப்போது இல்லத்தரசியானவர்கள் சமையலறையில் ஏதேனும் தாளிக்கும் போதோ அல்லது ஏதேனும் சமைக்கும் போதோ அதன் வாசனை உங்கள் மூக்கை துளைக்கிறதா..?உடனே சமையலறை பக்கம் எட்டிப்பார்த்து என்ன சமையல் இவ்வளவு கமகமன்னு வாசம் வருதே? என நீங்கள் கேட்டால்... உங்களின் நினைவுத்திறன் நன்றாக இருக்கிறது என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். 

அதாவது காற்றில் மிதந்துச் செல்லும் வாசத்தை நீங்கள் மூக்கால் நுகர்ந்து, அதன் சுவையை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றினால் உங்களின் நினைவுத்திறன் நல்லநிலையில் இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம் என்கிறார்கள்.

ஒரு சிலருக்கு சுவையும் தெரியாது. சமையல் வாசமும் நுகரமாட்டார்கள். அத்துடன் இவர்கள் தங்களுக்கான சுவாசத்தைக் கூட முழுமையாக மூக்கின் மூலமாக பெறாமல் அவ்வப்போது வாய் வழியாகவும் , விரைவான மூச்சு சுவாசத்தையும் பெற்றிருப்பார்கள். இத்தகைய காரணங்களால் இவர்கள், மனச்சோர்வால் ஏற்படும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், மறதி நோய் இவர்களை விரைவில் தாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதனால் எப்போதும் மூக்கால் சுவாசியுங்கள். மூக்கால் மட்டுமே சுவாசியுங்கள். அது உங்களின் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் அரணாகும். யோகா, தியானம், மூச்சு பயிற்சி போன்றவற்றை ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு அவசியம் என்று வலியுறுத்துவதின் பின்னணியில் இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் வைத்தியர்கள். மூளையிலுள்ள சுவையுணர் நரம்புகளுக்கும், நினைவுத்திறனை சேமித்து வைக்கும் நரம்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.

டொக்டர் தீபா செல்வி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29