இலங்கைக்கு “2019 இன் மிகச் சிறந்த பயண” விருது

Published By: Digital Desk 4

25 Oct, 2018 | 05:15 PM
image

எதிர்வரும் வருடத்திற்கான உலகளாவிய நாடுகளில் முதலாவது தரமான நாடாக இலங்கைக்கு “2019 மிகச் சிறந்த பயண” விருது லோனி பிளனற்றினால் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடத்தில், உலகளாவிய ரீதியாக சுற்றுலா பயணிகள் விஜயத்தை மேற்கொள்வதற்கு ஏற்ற முதலாவது நாடாக, உலக முன்னணி பயண அதிகார அமைப்பான லோன்லி பிளனற் தெரிவு செய்துள்ளது. 

“2019 மிகச் சிறந்த பயண” விருது குறித்த அறிவித்தல் இன்று உலகளாவிய ரீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“பயணத்திற்கான சிறந்த” இடம் லோனி பிளனற்றினால் மிகவும் ஆர்வத்துடன் எதிர்கொள்ளப்படும் வருடாந்தர நிகழ்வாகும். எதிர்வரும் வருடத்தில், சிறந்த பயண பிரதேசங்கள், போக்கு தன்மைகள் மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவங்கள் உள்வாங்கப்பட்டதாக அமைகின்றன. 

13 வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இருந்து இந்த நிகழ்வு லோனி பிளனற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கு ஏற்ற வகையில் எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்கான பயண திட்டங்கள் லோனி பிளனற்றினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த 2019ஆம் ஆண்டிற்கான இந்த “சிறந்த பயண” விருது கிடைக்கப்பெற்றதன் மூலம் இலங்கைக்கு கிடைத்த உச்ச விடயம் என லோன்லி பிளனட்டின் பேச்சாளர் சிரிஸ் ஸீஹ தெரிவித்துள்ளார். 

நீங்கள் குடும்பத்துடன் பயணிப்பவராக அல்லது புதிய சாகச முயற்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களாக, உடல்வளத்தை பேணுபவர் போன்ற எந்த வகையை சேர்ந்தவராக இருப்பினும், அவற்றை நட்பு ரீதியான இலங்கையில் பெற முடியும். தெற்காசியாவிலேயே மறு எழுச்சி பெற்ற நடுத்தர அளவிலான தீவு தேசத்தில் நட்பு ரீதியாக பெற முடியும் என்பதுடன் முன்னேற்றகரமான உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி போன்றவற்றை பெறலாம். முன்னர் எப்போதும் பெறாத சிறந்த அனுபவத்தை நோக்கி 2019 ஆண்டு பயணிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியின் மூலம் நாம் மிகுந்த மகிழ்ச்சியை அடைகின்றோம். லோனி பிளனற் ஆனது பயண மற்றும் சுற்றுலாத்துறை குறித்த செய்திகள் குறித்த அதிகாரத்தை கொண்டவர்கள். அவர்களால் வழங்கப்பட்ட இந்த ஒப்புதல் எமக்கு கிடைத்த பெரும் வெற்றி. 

சர்வதேச ரீதியாக சுற்றுலா வரைபடத்தில் இறுதியாக இலங்கை உள்வாங்கப்பட்டமை பாராட்டிற்கு உரியது. இந்த பிரச்சார செயல்பாடு காரணமாக, எதிர்வரும் குளிர்காலம் மற்றும் அதற்கு அப்பாலான ஆண்டில் உண்மையிலேயே பாரிய எழுச்சியை நோக்கி செல்வோம் என எதிர்பார்க்கின்றோம். 

இந்த உந்து சக்தி மூலம் புதிய பரிமாணத்துடனான அடையாளத்தின் மூலம் அடுத்த மாதம் சிறந்த பலனை பெற முடியும் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

சிறந்த பயண ஒழுங்கு விபரங்கள் சர்வதேச இணைய தளங்கள் மற்றும் சஞ்சிகைகளின் ஊடாக நானாவித மொழிகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. அதன் ஊடாக இலங்கை சுற்றுலா சந்தைக்கான வருகை விருத்தியடைந்து மேம்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் லோன்லி பிளனட்டினால் பரிந்துரை செய்யப்படும் சுற்றுலா தொடர்பான பட்டியலிடப்படுகின்றது. பரிந்துரைகள் பாரிய சமூக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உள்ளுரினர் மற்றும் செல்வாக்குள்ளவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் பின்னரான இறுதி தெரிவு நீதிபதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்படுகின்றது. 

பல கோட்பாடுகளையும் தேர்ந்து எழுத்துக் கொள்வதன் மூலம் ஒப்பிட முடியாத பயண ஏற்பாடுகளை நோக்கி செல்லும். 

அதேவேளை. புதிய முயற்சிகள், இருப்பதற்கான இடங்கள், சிறப்பான உணவு வகைகள் மூலமான அனுபவங்கள் மற்றும் சிறார்களை கவரும் விடயங்கள் குறித்து லோன்லி பிளனற்றின் நிபுணர்கள் தெரிவு செய்வர்.

“இவைதான் 2019 ஆண்டில் அனுபவிக்க வேண்டிய இடங்கள்” என லோன்லி பிளனட்டின் பேச்சாளர் சிரிஸ் ஸீஹ தெரிவிக்கின்றார். 

அவர்கள் தாமாகவே வருகை தரலாம், வாழ்க்கiயில ஒரு முறை மட்டும் கொண்டாடும் விடயங்கள், அல்லது நீண்ட காலமாக எதிர்பார்க்கும் நிகழ்வாக இருக்கலாம் - எதுவாக இருந்தாலும் பயணத்தை திட்டமிடுவதற்கு இதுவே ஏற்ற தருணம் எனவும் அவர் தெரிவித்தார்.

லோனி பிளனற் முன்னணி சுற்றுலா குறித்த ஊடக நிறுவனம் அத்துடன் பயண வழிகாட்டி முறைமையை கொண்டவர்கள் என்பதுடன் எப்படியான பயணிகளாக இருப்பினும் அவர்களுக்கு நம்பிக்கையான தகவல்களை கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றனர். 

கடந்த நான்கு தசாப்த காலமாக நாங்கள் 145 மில்லியன் வழிகாட்டி நூல்களை அர்ப்பணிப்புடனும். சிறந்த உணர்வினை பயண சமூகத்தவர்களுக்கு வழங்கி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57