மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிலியா கானெல் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் அணியின் ஜவேரியா கானின் கையை பதம் பார்த்ததில் அவரது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மகளிர் கிண்ண இருபதுக்கு -20 உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது அந்த அணியின்  ஆரம்பத்துடுப்பாட்ட வீராங்கனை ஜவேரியா கான்  பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்தார்.

பாகிஸ்தான் வீராங்கனை ஜவேரியா கான் பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்ததால் மைதானத்தில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.

மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிலியா கானெல் வீசிய பவுன்சர் பந்தே ஜவேரியா கானின் கையை பதம் பார்த்தது. பின்னர் அவரது தலையையும் பதம்பார்த்தது.

இதையடுத்து ஜவேரியா கான் மைதானத்திலே நிலைகுலைந்து விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது கையின் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஒருநாள் சிகிச்சையின் பின்னர்  ஜவேரியா கான் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.