கனவில் காண்­ப­தைக்­கூட கண்­ட­றி­ய­கூ­டிய கணிப்­பொ­றி­களும் கைக்கு கட்டும் விந்­தைகள் நிறைந்த தொழில்­நுட்ப உலகில் நாமும் அத­னுடன் சேர்ந்து நடை­போட்டு வலம் வரு­கின்ற காலம் இது.

இங்­குள்ள இளைய சமுதா­­யத்­தினர் நவீன நட­வ­டிக்­கை­களை உள்­வாங்கி தற்­கா­லத்­திற்கு ஏற்­ற­வாறு தமது அனைத்து பழக்­க­வ­ழக்­கங்­க­ளையும் மாற்றி வரு­கின்­றனர் என்றால் அது மிகை­யில்லை. இன்­றைய இளை­ஞர்­களின் நாட்­ட­மா­ன­து­ அ­தி­க­மாக தங்­களை அழ­குப்­ப­டுத்­து­வதிலும் தாம் ஏதா­வது ஒரு சமூக வளைத்­த­ளத்­திற்­குள பிர­வே­சிப்­ப­தி­லும்தான் உள்­ளது.

முதலில் நாம் அவர்­களின் அலங் கர நாட்­டத்­தினை எடுத்து நோக்­கினால் தம்மை அலங்­க­ரித்­துக்­கொள்­வது அவர்­களின் அன்­றாட நட­வ­டிக்­கை­களில் முதன்­மை­யா­னது என்றே கூற முடியும். அலங்­க­ரித்தல் அவர்­களின் இன்­றி­ய­மை­யா­த­தொரு செய­லா­கி­விட்­டது. ஆம் இன்று நாம் தம்மை அழ­குப்­ப­டுத்­திக்­கொள்­வதில் நாட்டம் இல்­லாத ஒரு இளை­ஞ­னையோ யுவ­தி­யையோ காண்­பது என்­பது அரிது. அவர்­களின் இந்த நாட்டம் அவர்கள் அதி­க­மாக அழ­கு­சா­த­னப்­பொ­ருட்­களை நுகர்­வ­தற்கு தூண்­டு­த­லாக அமை­கின்­றது.

இத­னால்தான் இன்று கடும் போட்டி நிலவும் ஒரு சந்­தைப்­ப­டுத்தல் துறை­யாக இத்­துறை காணப்­ப­டு­கின்­றது. என­வேதான் கடும் போட்டி நிலவும் இத்­து­றையில் தம்மை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­காக அழகு சாத­னப்­பொ­ருட்­க­ளை­உற்­பத்தி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னங்கள் பல்­வேறு தந்தி­ரோ­பா­யங்­களை தமது போட்­டி­யாளர்கள் மத்­தியில் தமது வாடிக்­கை­யா­ளர்­களை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக மேற்­கொண்டு வரு­கின்­றன. அவ்­வா­றான ஒரு முறையே இந்த சமூக வலைத்­த­ளங்கள்.

ஆம் அவர்­களின் இலக்கு சந்­தை­யாகத் திகளும் இந்த இளை­ஞர்­களை கவரும் சிறந்த வழி­யாக அனைத்து நிறு­வ­னங்­களும் சமூக வலைத்­த­ளங்­களை தெரிந்­துள்­ள­தோடு அவற்றின் ஊடாக தமது மேம்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இவ்­வாறு வலைத்­த­ளங்­களில் தமது விளம்­பர நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் போது தமது பெரும்­பா­லான நேரத்தை இவ்­வா­றான வலைத்­த­ளங்­களில் செலவு செய்யும் இளை­ஞர்கள் மத்­தியில் அது நிச்­ச­ய­மாக தாக்கம் செலுத்­து­கின்­றது என்றே கூறலாம்.

தாம் வலைத்­த­ளங்­களில் உலா வரும் நேரங்­களில் அங்கு பிர­சுரம் ஆகும் விளம்­ப­ரங்கள் இணைப்­புக்­களை அவர்கள் பார்க்க தவ­று­வ­தில்லை. இவ்­வாறு இவர்கள் தூண்­டப்­ப­டு­கின்­றனர். அத்­துடன் இவர்­களின் மனப்­பக்­கங்­களில் இவ் விளம்­ப­ரங்கள் பதிந்­து­வி­டு­வ­தோடு அவர்­களை நுகர்­விற்கும் ஈட்­டிச்­செல்­கின்­றன.. இவ் விளம்­ப­ரங்கள் சிலர் பார்த்த நொடி­யி­லேயே இணை­யத்­தி­னூ­டாக கட்­ட­ளை­களைப் பிறப்­பித்து கொள்­வ­ன­வி­னையும் மேற்­கொள்­கின்­றனர்.

அது­மட்­டு­மின்றி தங்­களின் நில­வ­ரங்­களை வலைத்­த­ளங்­க­ளி­னூ­டாக நண்­பர்­க­ளி­டையே பகிர்ந்­து­கொள்­ளும்­போதும் தமது புகைப்­ப­டங்­களை எடுக்­கும்­போதும் இப்­பொ­ருட்­களின் உத­வியை அதி­க­மாக நாடு­கின்­றனர். இதிலும் ஒருவர் அழ­கான தன் புகைப்­ப­டத்தை போட்டால் அடுத்த நபரும் தன்னை அலங்­க­ரித்­துக்­கொண்டு புகைப்­ப­டத்தை பிர­சு­ரிப்­பதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இவ்­வாறு வலைத்­த­ளங்­களில் செய்யும் சிறு சிறு செயல்­களும் இவ் அழ­குடன் தொடர்­பு­பட்­ட­தா­கவே அமைந்துவிட இவ்வலைத்தளங்களானது இளைஞர் சமுதாயத்தின் அழகு சாதன பொருட்கள் நுகர்வில் பெரும் அளவில் தாக்கம் செலுத்தி அச் சந்தைப்படுத்தல் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டித் தரும் அதேவேளை தாமும் இலாபமடைகின்றன.

எனவே, இதன் மூலம் தெளிவாவது யாதெனில் சிந்தித்து செயல்படவேண்டிய இளைஞர்கள் சிகையலங்காரத்திலும் சில வலைவீசும் தளங்களிலும் சிக்கி தமது சில்லறைகளை சிதற விடுகின்றனர்.