தேசிய மட்ட உதைப்பந்தாட்ட சம்பியனாகியது யாழ், புனித பத்திரிசியார் கல்லூரி

Published By: Vishnu

25 Oct, 2018 | 01:45 PM
image

தேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் சமநிலை தவிர்ப்பு உதைமூலம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் 16 வயதிற்குட்பட்டோருக்கான அணி வெற்றிபெற்று தேசிய மட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் கடந்த மாதம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் 16 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டம் இடம்பெறாமல் பிற்போடப்பட்டது.

இதன் இறுதியாட்டம் நேற்று புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை அநுராதபுரம் அல்ஹமிர் மத்திய கல்லூரி சந்தித்த்து.

முதல் பாதியாட்டத்தில் ஆதிக்கம்செலுத்திய புனித பத்திரிசியார் கல்லூரிக்கு லியோ ஜெரோம் அதிரடியாக ஒரு கோலினைப் பெற்றுக்கொடுக்க 2:0 என்ற கோல் கணக்கில் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலை பெற்றது.

இந்நிலையில் பதிலுக்கு அல்ஹமிர் கல்லூரி அணி ஒரு கோலினைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, 2 ஆம் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத வகையில் தமது போட்டித் தன்மையை வெளிப்படுத்தின. இதனால் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனித பத்திரிசியார் கல்லூரி அணி கோல் போடுவதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட, அல்ஹமிர் கல்லூரி அணி தமக்குக் கிடைத்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கோலினைப் போட்டு கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

இந் நிலையில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2 : 2 என்ற கோல்கணக்கில் சமநிலை பெற்றன.

இதையடுத்து சமநிலையை உடைப்பதற்காக வழங்கப்பட்ட பெனால்டி உதையை பயன்படுத்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லுரி அணி 4:3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் சம்பியன் ஆகியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46