(கொல்­கத்­தா­வி­லி­ருந்து நெவில் அன்­தனி)

கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற போட்டியில் அரை நம்­பிக்­கை­யுடன் ஆப்­கா­னிஸ்­தானை எதிர்­கொண்ட நடப்பு சம்­பியன் இலங்கை புத்­தெ­ழுச்­சி­யுடன் விளை­யாடி 6 விக்கெட்டுக்களால் வெற்­றியை ஈட்­டிக்­கொண்­டது. 

சர்­வ­தேச இரு­பதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணி­களும் சந்­தித்த முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வாகும்.

இலங்கை அணியின் டில்ஷான் நிதானம் கலந்த வேகத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி 56 பந்­து­களில் 3 சிக்­சர்கள் 8 பவுண்­டரி­க­ளுடன் 83 ஓட்­டங்­களைக் குவித்து இலங்­கையின் வெற்­றிக்கு வித்திட்டார்.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்­கா­னிஸ்தான் 20 ஓவர்­களில் 7 விக்­கெட்டுக்­களை இழந்து 153 ஓட்­டங்­களைப் பெற்­றது.

ஆரம்பத்தில் 5 ஓவர்கள் நிறைவில் ஓட்ட வேகத்தை ஓவ­ருக்கு ஆறாக உயர்த்­திக்­கொண்ட ஆப்கா­னிஸ்தான் 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. 

ஆனால் அடுத்த 5 ஓவர்­களில் ஒரு விக்கெட்டை மாத்­திரம் இழந்து 53 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்­ஸாயும் 31 ஓட்­டங்கள் பெற்று ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு தெம்­பூட்­டினார். ஸ்டனிக்ஸாய் அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி 62 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.

இலங்கை பந்­து­வீச்சில் திசர பெரேரா 3 விக்­கெட்­டுக்­க­ளையும் ரங்­கன ஹேரத் 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்தினர்.

154 என்ற வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய இலங்கை முதல் 5 ஓவர்­களில் விக்கெட் இழப்­பின்றி 41 ஓட்­டங்­களைப் பெற்று தன்னை ஸ்திரப்­ப­டுத்­திக்­கொண்­டது. எனினும் மொஹம்மத் நபி வீசிய ஆறா­வது ஓவரில் தினேஷ் சந்­திமால் 18 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். பெரிதும் நம்­பிக்­கை­யுடன் கள­மி­றக்­கப்­பட்ட லஹிரு திரி­மான்ன தடு­மா­றி­ய­வாறு துடுப்­பெ­டுத்­தாடி 6 ஓட்­டங்­க­ளுடன் நடையைக் கட்­டினார்.

தொடர்ந்து கப்­பு­கெ­தர துர­திர்ஷ்­ட­வ­ச­மாக 10 ஓட்­டங்­க­ளுடன் ரன் அவுட் ஆனார். அந்த சந்­தர்ப்­பத்தில் இலங்­கையின் வெற்­றிக்கு 29 பந்­து­களில் 41 ஓட்­டங்கள் தேவைப்­பட்­டன.

இந் நிலையில் டில்­ஷானும் அணித் தலைவர் மெத்­தி­யூஸும் வேக­மாக ஓட்­டங்­களைக் குவித்­த­துடன் ஆப்­கா­னிஸ்தான் களத்­த­டுப்­பா­ளர்கள் விட்ட 3 பவுண்ட்­ரி­களும் இலங்கையின் வெற்றியை சுலபமாக்கியது. இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் சோடை போயிருந்த இலங்கை அணி புதுத் தெம்புடன் இருபதுக்கு 20 தொடரில் தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை உபாதைக்குள்ளாகி இருக்கும் வேகப்பந்துவீச்சா ளர் லசித் மாலிங்க வெறும் பார்வையாளராக இலங்கை அணியின ரின் ஆசனத்தில் அமர்ந்திருக்க நேர்ந்தது.