மீண்டும் சிக்கினார் மலேசிய முன்னாள் பிரதமர் ரஸாக் !!!

Published By: Digital Desk 7

25 Oct, 2018 | 11:22 AM
image

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது சகாக்கள் புதிய ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக கோலாலம்பூர் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகியுள்ளனர்.

"எம்டிபி" கடன்கள் தொடர்பாகவும் இன்டர்நேஷனல் பெற்றோலியம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கம்பனிக்கு செலுத்தப்பட்ட பணம் தொடர்பாகவும் குறித்த இருவர் மீதும் குற்றஞ் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் பிரமதராக நஜீப் ரஸாக் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் 10ஆம் திகதி வரையில் பதவி வகித்த காலப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் அந்நிய முதலீட்டை கவர்வதற்கும் 1 மலேசிய மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பை தொடங்கினார்.

அந் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 267 மலேசிய ரிங்கிட் தொகையை நஜீப் ரஸாக் தனது சொந்த வங்கி கணக்கிற்கு முறைகேடாக மாற்றியதாக குற்றஞ் சுமத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் ரஸாக் தோல்வியடைந்தார் .

புதிய பிரதமராக மகாதிர் முகமது பொறுப்பேற்றார்.

மகாதிர் முகமது பிரதமராக பொறுப்பேற்று சில தினங்களில் நஜீப் ரஸாக்கின் இல்லத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடாத்தினர்.

இதன் போது பொலிஸார் விலையுயர்ந்த ஆபரணங்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா ஆகியோர் அடுத்தடுத்து கைது செயய்யப்பட்டனர்.

இந் நிலையிலேயே நஜீப் ரஸாக் மீது புதிய ஊழல் குற்றசாட்டு இன்று பதிவுசெய்யப்படவுள்ளது.

நேற்று பிற்பகல் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் விசாரணைக்கு பின்னர் வெளியேறினார். ஆனால் ஊழல் தடுப்பு ஆணைத் தலைமையகம் வந்தடைந்த நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ மொஹம்மட் இர்ஃபான் செரிகார் அப்துல்லா கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இச் சம்பவம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“நஜீப் ரஸாக் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரான ஹசானா அப்துல் ஹமீது, நிதியமைச்சின் மூத்த அதிகாரி முகமது இர்பான் செரிகார் அப்துல்லா ஆகியோர் மீது புதிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவுள்ளன.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவுள்ளன என்ற தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நஜீப் ரஸாக் மீது ஏற்கனவே 32 குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் புதிய குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47