பல கோடி ரூபாவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள்:வவுனியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

25 Oct, 2018 | 10:04 AM
image

வவுனியாவில் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும் செயற்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது.புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த மலசலகூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை. 

இதனை வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்தில் தொழில்புரிபவர்கள் மதுப்பாவனையிலும் சட்விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதுடன் விடுதியாகவும் செயற்படுத்திவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

இதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை இதனால் குறித்த புதிய மலசலகூடத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. 

அத்துடன் பொது மலசலகூடத்தில் தொழில்புரியும் நபர்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தை தவறான நடவடிக்கைக்குப்பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் குடிமனைகளைச்சுற்றியுள்ளதால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு தங்கியுள்ள இருவர் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அவதானிக்க முடிந்துள்ளது. 

இவ்வாறு மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தில் மதுப்பாவனையும் சட்டவிரோத நடவடிக்கையும் இடம்பெற்று வருவதை இங்குள்ள அதிகாரிகள் கண்டுகொள்வில்லை. இவ்வாறு நகரத்தின் முக்கிய பகுதியிலுள்ள மலசலகூடத்தினை அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தமது கண்களைத் திறந்துகொண்டு உறங்குகின்றதை இச் செயற்பாட்டில் அவதானிக்க முடிந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31