இவ் ஆண்டில் மீட்கப்பட்ட வெடிபெருட்கள் எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

25 Oct, 2018 | 09:47 AM
image

இவ் வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,344 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் வழங்கிய 600 மில்லியன் ரூபா நிதியுதவியினை அடிப்படையாக கொண்டே இக் கண்டிவெடிகளும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2018 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க நிதியுதவியுடன் 1.86 மில்லியன் சதுர மீற்றர்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் கண்ணிவெடி ஆபத்தை நீக்குவதற்கு அமெரிக்கா 2002 ஆம் ஆண்டு முதல் 9.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

அமெரிக்க நிதியுதவியன் பயனாக, இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டம் 2017ஆம் ஆண்டு கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய எட்டு மாவட்டங்களில் அவற்றை அகற்றும் முயற்சிகளுக்கு அமெரிக்க தொடர்ந்தும் நிதியுதவி வழங்கி வருகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் 664 கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

உள்ளூர் பங்குதாரரான சமூக ஒற்றுமைக்கான டெல்வோன் சங்கம் மற்றும் சர்வதேச பங்காளரான ஹலோ ட்ரஸ்ட், மைன்ஸ் அட்வைசரி குழு ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் இந்தக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34