கல்வியில் விசேட திறமையை வெளிப்படுத்தி வரும் மாணவனுக்கான ஜனாதிபதியின் பரிசு

Published By: Vishnu

24 Oct, 2018 | 07:10 PM
image

கல்வியில் விசேட திறமைகளை வெளிப்படுத்தி வரும் கொழும்பு கல்கிஸ்சை விஞ்ஞான கல்லூரியின் தெவின் இதுசர ரத்னாயக்க என்ற மாணவனின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நவீன சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

கல்கிஸ்சை விஞ்ஞானக் கல்லூரியின் பரிசளிப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் வணிகப் பிரிவில் 03 ஏ சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ள தெவின் இதுசர ரத்னாயக்க என்ற மாணவன் ஜனாதிபதி விருது ஒன்றை பெற்றுக்கொண்டார்.

இதன்போது சக்கர நாற்காலியில் வருகை தந்த இம்மாணவனுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி, அம்மாணவனுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்தபோது, தனது கல்வி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மின்சாரத்தில் செயற்படும் சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுத்தந்தால் வசதியாக இருக்குமென்று கூறினார். அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அம் அம்மாணவனுக்கு மின்சாரத்தில் இயங்கும் சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றி இன்றைய தினம் இந்த நிதி அன்பளிப்பை ஜனாதிபதி வழங்கி வைத்தார். தனது பெற்றோருடன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மாணவன் தெவின் இதுசர ரத்னாயக்க குறித்த காசோலையை ஜனாதிபதி பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44