சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் 43 ஆவது நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில்

Published By: Vishnu

24 Oct, 2018 | 06:53 PM
image

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பிரதான விகாரை ஒன்றை மையப்படுத்தி ஜனாதிபதி  தலைமையில் இடம்பெறும் சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் 43 வது சமய உரை நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள அரச மரத்திற்கு அருகில் இடம்பெற்றது.

சங்கைக்குரிய மாத்தரை மஹிந்த தேரரினால் இன்றைய சமய உரை நிகழ்த்தப்பட்டதுடன் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அரச மரத்திற்கு அருகில் இடம்பெற்ற முதலாவது சமய உரை நிகழ்ச்சி இதுவாகும்.

இதன்போது ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் இந்த அரச மரத்தை சுற்றி தங்க வேலி ஒன்று அமைக்கப்பட்டதுடன், புத்தபெருமானின் சிலை ஒன்றும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இன்று காலை இங்கு வருகை தந்த ஜனாதிபதி, சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதுடன், சமய உரையையும் செவிமடுத்தார். 

மேலும் ஜயந்தி சிறிசேன, அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிக்குழாமினர் மற்றும் பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06