க க க போ படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் ஐழா, b door என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். 

அவரது உடலை மலேசிய பொலிஸார் தேடிவந்தனர். இன்று காலை 8 மணியளவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. க க க போ படத்தை புதுமுக இயக்குநர் விஜய் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நாயகன் மரணமான செய்தி கேட்டு இப்படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

​படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் சமீபத்தில் சன் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதன் ஒளிபரப்பை தன் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே மலேசிய சென்றார். அடுத்த வாரம் இசை வெளியிட்டு விழா நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.