2020 ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணிக்கு ஜப்பான் அணுசரணை

Published By: Vishnu

24 Oct, 2018 | 12:46 PM
image

2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினருக்கும் தூதுக் குழுவினருக்கும் ஜப்பானின் சீபா பிராந்தியந்தின் சம்மு நகர சபை அனுசரணை வழங்கியுள்ளது.

2020 ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கவும் அவர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக தனியான மைதான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு ஜப்பான் மக்களிடையே இலங்கையின் கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இதற்கான அனுசரணை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தமும் விளையாட்டுத் துறை அமைச்சிற்கும் சம்மு நகர சபைக்குமிடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நேற்யை தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த சம்மு நகர சபையின் நகர பிதா மட்சுசிடா ஹிராக்கி (Matsushita Hiroaki) உள்ளிட்ட பிரதிநிதிகள் அனுசரணை வழங்குதல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர சங்க நாயக்கர் எத்துல்கோட்டே மஹிந்தாராமாதிபதி, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பொதுச் செயலாளர் வண. மீகஹவத்தே சந்திரசிறி நாயக்க தேரர் மற்றும் தென் மாகாண பிரதான சங்க நாயக்கர் எல்பிட்டிய விகாரமஹாதேவி பிரிவெனாதிபதி இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பிரதி செயலாளர் வண. வெலிபிட்டிய சீவலி நாயக்க தேரர் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வல் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33