குசல் மென்டிசிற்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கியது ஏன்? சந்திமல் கருத்து

Published By: Rajeeban

24 Oct, 2018 | 12:15 PM
image

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல்மென்டிஸ் களத்தடுப்பு பயிற்சியின் போது காட்டிய உத்வேகத்தை அடிபடையாக வைத்தே அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை  வழங்க முன்வந்ததாக  அணித்தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய குசல்மென்டிஸ் நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

குசால் மென்டிஸ் ஆறு சிக்சர்களையும் அடித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திமல்  களத்தடுப்பு பயிற்சிகளின் போது குசல் மென்டிஸ் வெளிப்படுத்திய தீவிரத்தை கருத்தில்கொண்டே நாங்கள்  அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க முன்வந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் களத்தடுப்பில் மிகச்சிறந்த மனோநிலையை வெளிப்படுத்தினார் என தெரிவித்துள்ள தினேஸ் சந்திமல் குசால் மென்டிஸ் போன்ற வீரர்ஒருவரால் வெகுவிரைவிலேயே பழைய சிறப்பான நிலைக்கு மீள திரும்பமுடியும் என்பது எங்களிற்கு தெரியும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குசால்மென்டிஸ் எவ்வளவு சிறந்த வீரர் என்பது எங்களிற்கு தெரியும் அவர் எங்களின் எதிர்காலம் என தெரிவித்துள்ள சந்திமல் அவர் அந்த பொறுப்பை ஏற்று  மிகச்சிறப்பாக விளையாடினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடவுள்ள மூன்று துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடியமை குறித்தும் சந்திமல் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58