முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் பரஸ்பரம் ; அகிலவிராஜின் அதிரடி உத்தரவு

Published By: Vishnu

23 Oct, 2018 | 07:27 PM
image

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் போது பரஸ்பர புள்ளிகள் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதனை அடிப்படையாக கொண்டு நேர்முக பரீட்சைக்காக அழைக்கப்படும் மாணவர்களுக்கு வழங்கும் ஆவணத்தில் உள்ள இறுதி புள்ளிகள் தற்காலிக ஆவணத்தில் உட்சேர்க்கும் போது மாற்றப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன. 

இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,

அரசாங்கத்தினால் தகவல் அறியும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பாடசாலைகளில் ஓரிரு அதிகாரிகள் பொறுபற்ற முறையில் பரஸ்பர புள்ளிகளை பெற்றோர்களுக்கு வழங்குவதனை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என்றே கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துகொள்ளும் நேர்முக பரீட்சைகள் ஒழுக்கமான முறையிலும் நீதியான முறையிலும் நடத்துவதில் அவதானம் செலுத்துமாறும், முக்கியமாக கல்வி அமைச்சின் கீழ் நேரடியாக நிர்வகிக்கப்படும் தேசிய பாடசாலைகளில் நடக்கும் நேர்முக பரீட்சைகளின் ஒழுக்கம் பேணல் விடயத்தை சீரான முறையில் அவதானிக்க வேண்டும்.

இதற்கு அப்பால் தமது பிள்ளைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் கொள்ளும் தருணங்களின் போது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை பெற்றுகொள்ளும் உரிமைகளின் பூரண பிரயோசனத்தை பெற்றுகொள்ளுமாறும் அநீதி இழைக்கப்பட்டிருப்பின் எந்த தருணத்திலும் கல்வி அமைச்சர் என்ற வகையில் பெற்றோர் மற்றும் சிறுவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு அர்ப்பனிப்புடன் செயற்படுவேன் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02