ஒலுவில் மீனவப் பிரச்சினையை நேரில் சென்று கண்டறிந்த கோல்டன் பெர்னாண்டோ

Published By: Vishnu

23 Oct, 2018 | 03:38 PM
image

ஒலுவில் மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளர் டாக்டர் கோல்டன் பெர்னாண்டோ இன்று ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அம்பாறை மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளனத்தினால் ஒலுவில் மீன்பிடி துறைமுக பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜருக்கமைய ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலாளர் இவ் விஜயத்தை மேற்கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நஸீர் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கல்முனை கரையோர மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம்,  கல்முனை மாவட்ட கடற்றொழில் அமைப்பு போன்றவற்றின் முக்கியஸ்தர்களும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எம்.எஸ்.நஸீர், ஒலுவில் துறைமுக பிரச்சினையினால் 15 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேற்படி பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதியின் நல்லிணக்க கூட்டிணைப்புச் செயலளர் கோல்டன் பெர்னாண்டோ, இது தொடர்பாக உண்மையான ஒரு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து இப் பிரச்சனைக்கு தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் வாக்குறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04