ஆயிரம் ரூபாவை வலியுறுத்தி பொகவந்தலாவ தோட்ட பகுதிகளில் பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

23 Oct, 2018 | 01:21 PM
image

பெறுந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டுமென  கோறி பொகவந்தலாவ டின்சின் மற்றும் பொகவந்தாவ கெம்பியன் நகரபகுதிகளிலும் பாரிய ஆர்ப்பாட்டம்  இன்று முன்னனெடுக்கபட்டுள்ளது.

பொகவந்தலாவ கெம்பியன் நகரில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்12தோட்டபகுதிகளை சேர்ந்த 2000கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு பொகவந்தலாவ டின்சின் நகரில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் போது நான்கு தோட்டபகுதிகளை சேர்நத 600கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சவப்பெட்டி ஏந்தி கொடும்பாவி எறித்தும் மண்ணெண்ணெயை தமது உடம்பில் ஊற்றி தீ குளிக்கவும் இன்றய ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டகாரர்கள் முயற்சி செய்தனர்.

நம் நாட்டின் பிரதான ஏற்றுமதி பொருளாக இன்று நாங்கள் பறிக்கும் தேயிலை விளங்குகின்ற போது ஏன் எங்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க இந்த தோட்டகம்பணி காரர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். 

ஆனால் வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் இந்த நாட்டுக்கு என்ன இலாபத்தை பெற்று கொடுக்கிறார்கள் ஆகவே தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் எனவும் ஆரபாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கபட வேண்டும் என கோறி வடகிழக்கு மக்கள் லண்டன்,சிங்கபூர் போன்ற வெளிநாடுகளில் தமிழ் உறவுகளும் இம்முறை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் என கோறி எங்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு வெளிநாடுகளில் உள்ள உறவுகள் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா பெற்று கொடுக்கபடவேண்டும் என வழியுருத்துகின்ற போதும் ஏன் இந்த தோட்டங்களை நடாத்துகின்ற கம்பணிகாரர்கள் ஏன் எங்களுக்கான சம்பளத்தை அதிகரித்து கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.எங்களால் பறிக்கபடுகின்ற தேயிலை கூட ஒரு நல்ல தேனீராக அருந்து வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை நல்லதேயிலையினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை தேடிகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகியோர் இனைந்து தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்  ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்று கொடுக்கபட வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் கோறிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47