ரோ அமைச்சர்களை அம்பலப்படுத்துங்கள் -நாமல் வேண்டுகோள்

Published By: Rajeeban

23 Oct, 2018 | 11:39 AM
image

இந்திய புலனாய்வு அமைப்பான ரோவிடம்  பணம் பெறும் இரு அமைச்சர்களின் விபரங்களை ஜனாதிபதியும் பிரதமரும் வெளியிடவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில அமைச்சர்கள் ரோவிடமிருந்து பணம் பெறுவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உண்மையானால் இதுவொரு தேசிய பிரச்சினை என தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது சர்வதேசரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள நாமல்ராஜபக்ச இந்த அமைச்சர்களை அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரோ தன்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதை ஜனாதிபதி அம்பலப்படுத்தியுள்ளார்,இந்திய ஊடகம் இது குறித்து செய்தி வெளியிட்டவேளை அவர் அதனை நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச எனினும் தற்போது அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சரவையில் இரு ரோ அமைச்சர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இவற்றிற்கு இடையில் தொடர்பிருக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இதில் ஏதோ உண்மையும் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து நாளிதழ் தனது செய்தி குறித்து உறுதியாகவுள்ளதால் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு பிரதமரிற்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04