தசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்

Published By: Rajeeban

22 Oct, 2018 | 10:03 PM
image

பல தசாப்தங்களாக இடம்பெற்ற பாலியல்   துஸ்பிரயோகங்களிற்காக பாதிக்கப்பட்டசிறுவர்களிடம் அவுஸ்திரேலியாவின் சார்பில் பிரதமர் ஸ்கொட் மொறிசன்  மன்னிப்பு கோரியுள்ளார்

.பல தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளமை ஐந்து வருடங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே பிரதமர் தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.

இன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம் எதிர்கொள்கின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டு மன உளைச்சலிற்குள்ளனவர்கள் முன்னாள் மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் பணிவுடையவர்களாகயிருக்கவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தழுதழுத்த குரலில் உரையாற்றிய பிரதமர் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை ஏற்றுக்ககொண்டதுடன் இந்த விடயத்தில் ஸ்தாபனங்களின் தோல்வியை கண்டித்துள்ளார்.

பாதிக்கபட்ட ஒருவர் சமீபத்தில் என்னிடம் தெரிவித்தது போல் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு எதிரிகள் இதனை செய்யவில்லை, அவுஸ்திரேலியர்களே அவுஸ்திரேலியர்களிற்கு இதனை செய்தனர் எங்கள் மத்தியில் உள்ள எதிரிகளே இதனை செய்தனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அப்பாவிகளின் எதிரிகள் என தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் இது ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு தசாப்தமும் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47