"கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலை தடுக்க இந்தியா உதவும்"

Published By: Vishnu

22 Oct, 2018 | 06:02 PM
image

இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை தடுக்க இந்தியா உதவும் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய பெற்றோலிய வங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இந்திய பிரதமர் நரேந்நிர மோடியை சந்தித்து இலங்கை கிரிக்கெட்டின் நிலை பற்றி விபரித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,

'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கிரிக்கெட் தொடர்பாக பல விடையங்கள் பற்றி கலந்துரையாடினோம். 

குறிப்பாக இந்திய சி.பி.ஐ விசாரணைகளை மேற்கொண்டு பல கிரிக்கெட் சூதாட்டங்களை நிறுத்தியுள்ளதோடு அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் அது தொடர்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நாம் பாரதப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவர் உடனே மூத்த அமைச்சர் அருன் ஜெட்லியிடம் தொடர்பை மேற்கொண்டு கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிரதிபலிப்பாக இந்தியா  எமது நாட்டுக்கு கிரிக்கெட் ஊழலை தடுப்பது தொடர்பான அறிவு மற்றும் தகவலை வழங்குவதாக தெவிரித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களையே குறை கூறுகின்றனர். ஆனால் வீரர்களை விட சூதாட்ட காரர்களுக்கே முழுப்பொறுப்புண்டு. நாம் இந்த கிரிக்கெட்டின் கீழ் நிலைக்கு பின்னால் இருப்பவர்களையே கண்டுபிடிக்க வேண்டும்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09