கொழும்புக்கு அடுத்தபடியாக மற்றுமொரு பெரிய நகரத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நகர அபிவிருத்தி செயல்திட்டத்தினடிப்படையில்  யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை மாநாடு இன்று ஊடக அமைச்சில் இடம்பெற்ற போதே, பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முனைவைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வராந்த அமைச்சரவை தீர்மானங்கள் பின்வருமாறு,

01. பூகோளவியல் கால நிலை மாற்றங்கள் தொடர்பான உடன்படிக்கை மற்றும் உள்நாட்டுத் தளத்தகை இணக்கப்பாடு (பூகோளவியல் வெப்பத்தைக் குறைப்பதற்கான உள்நாட்டுப் பங்களிப்பு) (விடய இல 06)

ஆரம்பக் கைத்தொழில் யுகத்துக்குச் சமாந்தரமாகத் தற்சமயம் பூகோளவியல் வெப்ப நிலை அண்ணளவாக ஒரு பாகை செல்சியஸ்ஸினால் அதிகரித்துள்ளது. கைத்தொழில் மயமாதல், நகர் மயமாதல் மற்றும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற காடழிப்பு மற்றும் சூழல் மாசாக்கிகள், ஏனைய இயற்கை வளங்களுக்;கு ஏற்படும் பாதிப்புக்கள் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பூகோளவியல் வெப்ப நிலை அதிகரித்திருப்பதால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களுக்கு உலகலாவிய அனைத்து நாடுகளும் பாரியளவில்  முகங் கொடுத்துள்ளன. 

குறித்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகளின் சபையானது 1992 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரியோ மா நாட்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான எல்லைப்படுத்தப்பட்ட இணக்கப்பாடு தொடக்கம் 2015 பாரிஸ் மாநாடு வரை வெவ்வேறு இணக்கப்பாடுகளை ஏற்படுத்திய வண்ணம் மானிட சமுதாயத்தின் நிலைப்பாடு தொடர்பில் சூழலைப் பாதுகாத்த வண்ணம் பூகோளவியல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் பொறுட்டு காலநிலை மாற்றங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த வண்ணம் உள்ளது. 

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான எல்லைப்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் 21 ஆவது கூட்டத் தொடர் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதன் போது குறித்த வெப்ப நிலையை 1.5 பாகை சென்டிகிரேட்டுக்குக் குறைவாக வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சமவாயத்தில் தமது பங்களிப்பை வழங்குவதற்காக வேண்டி இலங்கை அரசாங்கமானது இலங்கை காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு தேவையான நட்ட ஏற்பாடுகளை செய்வதற்கும், சுற்றாடல் நட்புள்ள புசுமை ஆற்றல் மிகக் கிராமங்களை நிர்மாணிப்பதை நோக்காகக் கொண்டும் குடிகள் ஒன்று திரலும் சனச் கருத்திட்டம், சமுர்தி கருத்திட்டம், சர்வோதய கருத்திட்டம் ஆகிய குடிகளின் இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து 2016 – 2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் 10,000 கிராமங்களில் “நீளப் பசுமை அழகான இலங்கை” நிகழ்ச்சியையும் செயற்படுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   

02. வனசீவராசிகள் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுவதல்  (விடய இல. 08)

வனசீவராசிகளின் நலன்கருதி வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அருல் செய்யப்பட்டு வருவதுடன், இதனிடையே ஏதேனும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றவுடன், உரிய இடத்த்துக்குச் சென்று தேவையான துரித நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு எதவாக, இவ்வாறான மோதல்கள் இடம்பெறுகின்ற அனைத்து வலயங்களுக்கும் வனசீவராசிகள் கட்டுப்பாட்டு அலகுகளை நிறுவுவதற்கு வலுவாதார அபிவிருத்தி வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

03. பெரு மழையினால் நேர்ந்த சேதங்கள் பற்றிய அறிக்கை  (விடய இல. 09)

பெரு மழை காரணமாக மத்திய, மேல், வடமத்திய, வட மேல், ஊவா மாகாணங்களில் ஏற்படும் மண்சரிவுகளால் அதி கூடிய மற்றும் மத்திய தர பாதிப்பிற்புள்ளாகும் மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவது மற்றும் நிர்மாணிப்பது தொடர்பாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முக்கியத்துவத்தின் அடிப்படையில் கட்டம் கட்டமாக நடவடிக்கைகளை மேற் கொள்வற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரிதர்~ன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. கசகஸ்தானில் நடைபெறவுள்ள வேர்ல்ட் எக்ஸ்போ அஸ்தானா  (விடய இல. 12)

கசகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் 2017 ஜுன் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை நாடத்தப்படவுள்ள வேர்ல்ட் எக்ஸ்போ அஸ்தானா 2017 கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக கசகஸ்தான் குடியரசின் அரசாங்கம் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனவே குறித்த பங்குபற்றலை உறுதி செய்து கொள்வதற்காக வேண்டி பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமித்து கொள்வதற்கும் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்களை தயார்படுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரி~hட் பதியூதீன்   அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. லங்கா சதோச நிர்வனத்தினை மறுசீரமைப்பு செய்தல் (விடய இல. 13)

லங்கா சதோச நிர்வனத்தின் நிலையற்ற நிதியியல் நிலைமையினை நிவர்த்திச் செய்யும் நோக்கில் அரச வங்கிகளுக்கு லங்கா சதோச நிர்வனம் செலுத்த வேண்டிய கடன் தொகையினை செலுத்துவதற்கும் அவசர நிலைமைகளின் போது பெற்றுக் கொள்வதற்கும் தேவையான நிதியினை திறைசேரி நிதியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர்  பி. ஹெரிசன் மற்றும் அபிவிருத்தி உபாய வழிகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர்  மலிக் சமரவிக்ரம ஆகியோர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. யாழ்ப்பாண நகரப் பிராந்திய தலையீடுகளுக்கான மேலதிக நிதியிடல் முறைத்திறனான நகர அபிவிருத்திச் செயல்திட்டம்  (விடய இல. 15)

இடம்சார் அமைவிட ரீதியில் சமநிலையான பொருளாதார வாய்ப்புக்களை பரவலடையச் செய்வதற்கும் முழுமையான பொருளாதார வசதியை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் வட பகுதியில் உள்ள வறுமையை ஒழிக்கவும் உரிய செயற்பாடாக கொழும்புக்கு அப்பால் இன்னுமொரு பெரிய நகரத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது முறைத்திறனான நகர அபிவிருத்தி செயல்திட்டத்தின் நோக்கமாகும். 

இச்செயல்திட்டத்தின் படி கொழும்புக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணம் நகரத்தை அபிவிருத்தி செய்ய பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முனைவைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. கல்முனை நகரில் அமைந்துள்ள சுனாமி வீடமைப்புத் தொகுதியின் அபிவிருத்தி செய்யப்பட்ட காணியொன்றை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்தல்   (விடய இல. 16)

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் பாரிய அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக கல்முனை நகரமும் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பேரழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு வாழ்விடங்களை மீண்டும் அமைத்து அவர்களை குடியிருத்துவதற்காக அரசினால் வீடமைப்பு நிர்மாணிப்பு நிகழ்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 

அந்த வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வீடமைப்பு நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவியினை பெற்று ஒதுக்கப்பட்ட காணியில் 174 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட மூன்று மாடி வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு வழங்கப்பட்டது. எனினும் முறையான பராமரிப்பு முறைகள் காணப்படாமையினால் குறித்த வீடமைப்பு தொகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நியாயமான முறையில் முகாமைத்துவச் சட்டமொன்றின் கீழ் பராமரிப்பு செய்வதற்கு முனாமைத்துவ கூட்டுத்தாபனம் ஒன்றை அமைத்து வீடமைப்பு அலகுகளின் அடிப்படை வசதிகளை பராமரிப்பதற்கு இயந்திரனியல் வசதியையும் வதிவாளர்களுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்கு இலகுவான முறையில் குறித்த காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கர்ப்பிணித் தாய்மாருக்கு ரூபா 20,000 பெறுமதியான போசாக்கு உணவுகளைப் பெற்றுக் கொடுத்தல்  (விடய இல. 19)

கர்ப்பமடைந்த மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தின் இறுதி 06 மாதங்களிலும், பாலூட்டும் தாய்மாருக்கு முதல் 04 மாதங்களிலுமாக 10 மாத காலப்பகுதிக்கு ரூபா 20,000 பெறுமதிமிக்க போசாக்கு உணவுகளைப் பெற்றுக் கொடுப்பது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போதைய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த செயற்றிட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக வேண்டி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் முதல் நிலைப் பணி நிர்மாணிப்பு உடன் படிக்கையுடன் தொடர்புடைய திட்டமிடல்களை ஆய்வு செய்து அனுமதித்தல் மற்றும் நிர்மாணிப்புப் பணி மேற்பார்வைக்கான ஆலோசனைச் சார் ஒப்பந்தம்  (விடய இல. 21)

மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் முதல் நிலைப் பணி நிர்மாணிப்பு உடன் படிக்கையுடன் தொடர்புடைய திட்டமிடல்களை ஆய்வு செய்து அனுமதித்தல் மற்றும் நிர்மாணிப்புப் பணி மேற்பார்வைக்கான ஆலோசனைச் சார் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் சிபார்சுக்கமைய மகாவலி ஆலோசனைப் பணியகத்துக்கு கையளிக்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரிதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

10. களனி, கட்புல ஆற்றுகைக் கலைகள், மெரட்டுவை, ரஜரட்ட, ஸ்ரீ ஜயவர்தனபுர, கொழும்பு போன்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகக் கணனிப் பாடசாலை போன்ற நிறுவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 24)

மேற்குறித்த உத்தேச நிர்மாணப் பணிகளுக்காக மொத்தமாக 1,706.9 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே குறித்த செயற்றிட்டத்தை 2016 – 2019 காலப்பிரிவில் செய்து முடிப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. உயர் கல்வி அமைச்சுக்கான நிர்வாகக் கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 25)

கொழும்பு 07, வோர்ட் பிளேஸ், இலக்கம் 18 எனும் முகவரியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள உயர் கல்வி அமைச்சுக் கட்டிடம் இன்று மிகவும் நெருக்கமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

எனவே அங்கு அமைந்துள்ள பழைய கட்டிடம் ஒன்றை அகற்றி மிகவும் பயனுள்ள வகையில் 64,255 சகுர அடி பரப்பளவு கொண்ட 08 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு ஆசுஐ இஸ்கேனர் இயந்திரம் வழங்குதல், நிறுவுதல் மற்றும் விற்பனையின் பின்னர் சேவைகள் வழங்குவதற்கான விலைமனுக்கோரல் (விடய இல. 27)

இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு ஆசுஐ இயந்திரமொன்றை வழங்குதல், நிறுவுதல், சிவில் வேலைகள், பயிற்சி மற்றும் பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்ளும்  நோக்கில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறைந்தளவில் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுதாரிக்கு வழங்குவதற்கு பதில் சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ஹோமாகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிட நிர்மாணிப்பு (விடய இல. 29)

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய செயலாளர் பிரிவாக ஹோமாகம பிரதேச செயலகம் காணப்படுகின்றது. இப்பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசம் 11,815 ஹெக்டேயர் நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. 

அங்கு வசிக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை 60,425 ஆகும். 2011 ஆண்டின் புள்ளி விபரங்களுக்கமைய அண்ணளவான சனத்தொகை 242,836 ஆணும். 10,000 எண்ணிக்கையான ஒய்வூதியர்கள் இப்பிரதேசத்தில் வசிக்கின்றமையினால் அதற்குரியதான விசேட அலுவல்கள் இப்பிரதேச சபையின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே பாரியதொரு வேலைப்பளு மிக்க குறித்த பிரதேச செயலகத்துக்காக 286.66 மில்லியன் ரூபா செலவில் 03 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

14. முல்லைத்தீவு மாவட்டச் செயலக நிர்மாணிப்பு – கட்டம் 11 (விடய இல. 30)

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் நிர்மானப்பணிகளின் இரண்டாம் கட்டத்தை 328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்க  உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

15. ஸ்டாட்டர் மீளிடுகை – விக்டோரியா மின்னுற்பத்தி நிலையம் (விடய இல. 31)

விக்டோரியா மின்னுற்பத்தி நிலையத்தில் 72 மெகா வொல்ட் மின்சக்திக் கொள்திறனை உற்பத்தி செய்யக் கூடிய 03 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் காணப்படுகின்றன. இவை 30 வருட பழைமை வாய்ந்தவையாகும். எனவே குறித்த மின்பிறப்பாக்கிகளை கட்டாயம் மீளிடுகை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் சிபார்சுகளை முன்வைக்கின்றனர். அதனடிப்படையில் 03 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரத்தின் ஸ்டாட்டர் மீளிடுகை செய்வதற்காக வேண்டிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறைந்தளவில் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுதாரிக்கு வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. பாரிய கொழும்பு கழிவு நீர் முகாமைத்துவச் செயற்றிட்டம் - கட்டம் 11 – வடிவமைப்பு, மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ ஆலோசகர்கள் (விடய இல. 33)

கழிவு நீர் தொகுதிக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் பாரிய கொழும்பு பிரதேச வாழ் மக்களின் பொதுச் சுகாதார மேம்பாட்டை நோக்காகக் கொண்ட “பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவத்தைச் செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கமானது ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனொன்றினை பெற்றுள்ளது. 

திட்ட அமுலாக்கத்திற்கு உதவும் முகமாக வடிவமைப்பு, மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ ஆலோசகர்கள் சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. சூழல் மண்டலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் (விடய இல. 37)

குறித்த திட்டத்தை 2016 – 2020 காலப்பகுதியில் முன்னெடுப்பதற்கு முன்னெடுப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 

எனவே இது தொடர்பில் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடன் கடன் புரிந்துணர்வு பேச்சு வார்த்தையில் ஈடுவடவும், ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமவிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.