அடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி ; அதிரடியாக வெற்றியிலக்கை கடந்தது இந்தியா

Published By: Vishnu

21 Oct, 2018 | 09:00 PM
image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு மேற்கிந்தியத் தீவுகள் அணியை பணித்தார். அதற்கிணங்க முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை குவித்தது.

சிம்ரன் ஹெட்மயர் 106 ஓட்டத்தையும், கிரேன் பவுல் 51 ஓட்டத்தையும், ஜோசன் ஹொல்டர் 38 ஓட்டத்தையும், ஷெய் ஹோப் 32 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

323 என்ற பெரியதோர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 1.6 ஆவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 

அதன்படி தவான் 6 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டத்துடன் தொமஸுனுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பையடுத்து ரோஹித் சர்மாவுடன் அணித் தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தாடி வர மேற்கிந்திய அணிக்கு இந்தியாவின் விக்கெட்டுக்களை தகர்த்த முடியாது போனது.

இவர்கள் இவரும் இணைந்து ஆடுகளத்தில் அதிரயான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 7.3 ஆவது ஓவரில் 1 விக்கெட்டுனை இழந்து 50 ஓட்டங்களை பெற்றது. விராட் கோலி 32 ஓட்டத்துடனம், ரோஹித் சர்மா 14 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இதன் பின்னர் 10.2 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரை சதம் கடந்தார். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து மைதானத்தில் அதிரடி காட்ட இந்திய அணி 15 ஆவது ஓவரிலேயே 100 ஓட்டங்களை பெற்றது.

21.2 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 51 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாச, மறுமுணையில் மேற்கிந்திய அணியின் பந்துகளை அடித்து நொருக்கிய விராட்  கோலி 26.5 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி 88 பந்துகளில் 3 ஆறு ஓட்டம் 16 நான்கு ஓட்டம் அடங்களாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 36 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 31 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி 84 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்களில் தனது 20 சதத்தை பூர்த்தி செய்ய இந்திய அணி 32.2 ஆவது பந்தில் 1 விக்கெட்டினை இழந்து 250 ஓட்டங்களை கடந்தது.

இதன் பின்னர் அணித் தலைவர் விராட் கோலி 32 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 140 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோலியின் வெளியேற்றத்தை தொடர்ந்து அம்பத்தி ராயுடு களமிங்கி ரோஹித் சர்மாவுடன் அதிரடி காட்டி வர இந்திய அணி 40 ஆவது ஓவருக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றது. 

இந் நிலையில் 42 ஆவது ஓவருக்காக தொமஸ் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ரோஹித் சர்மா அடுத்தடுத்து 3 நான்கு ஓட்டங்களை விளாசி தள்ளினார். இதனால் இந்திய அணி 42 ஆவது ஓவரின் முடிவில் 320 ஓட்டங்களை பெற்றது.

இறுதியில் 42.1 ஆவது பந்தில் ரோஹித் சர்மா 1 ஆறு ஓட்டத்தை விளாசி 150 ஓட்டங்களை கடந்த இந்திய அணி மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அதிடியாக கடந்தது.

இதன் மூலம் இந்திய அணி 42.1 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் ரோஹத் சர்மா 117 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்கள் 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 152 ஓட்டத்துடனும், ராயுடு 26 பந்துகளில் 1 ஆறு ஓட்டம் 1 நான்கு ஓட்டம் அடங்களாக 22 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணிக்காக 152 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மா தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35