எமது நாட்டில் மீண்டும் வன்முறை ஏற்படாமல் நாம் அனைவரும் காந்தியின் படிப்பினையை ஏற்று நடக்கவேண்டும் ; சம்பந்தன்

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 03:48 PM
image

மஹாத்மா காந்தி அவர்களின் 150வது ஜனனதினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த  எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் 

கடந்த பல நூற்றாண்டுகளில் இந்த உலகில் பயணித்த மிக உன்னதமான மனிதரான மஹாத்மா காந்தி அவர்களின் 150வது ஜனனதினத்தினை முன்னிட்டு பிரதமர் முன்வைத்துள்ள இந்த பிரேரணையில் ஒரு சில வார்த்தைகள் பேசு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தினை கௌரவமாக எண்ணுகிறேன்.

காந்தி அவர்கள் பிறந்த இந்திய நாடானது அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியமக்கள் சுதந்திரம் பெற்று தம்மைத்தாமே ஆளவேண்டும் என்பதில் அவர் மிகவும் நம்பிக்கையாக இருந்தார். இந்த குறிக்கோளை அடைவதற்கு அவர் பல்வேறு இயக்கங்களை நடாத்தினார். அவற்றுள் ஒன்று ஒத்துழைப்பு நல்கா இயக்கம். 

இந்திய மக்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தால், பிரித்தானியர்கள் அவர்களை ஆளமுடியாது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தியாவில் தமது கட்டுப்பாட்டினை இழக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோளாக இருந்தது. அவரது இயக்கம், அகிம்சை,சத்தியாகிரகம், உண்மை,மற்றும் சமூக ஒத்துழையாமை என்பவற்றின் அடிப்படையிலான வன்முறை அற்ற ஒன்றாகும். அத்தகைய மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு வெளிப்பாடே  உப்பு சத்தியாக்கிரகம் - டண்டி நடை இது உப்பு மீதான பிரித்தானியாவின் தனியுரிமையையும் வரிவிதிப்பையும் எதிர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். 

அவர் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறதென்றும் இந்திய மக்கள் சமூக ஒத்துழையாமையை வன்முறையற்ற வடிவில் வெளிப்படுத்தினால் அவர்கள் வெற்றியும் சுதந்திரமும் பெறலாம் எனவும் அத்தகைய எதிர்ப்பிற்கு முன்னாள் பிரித்தானியர் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்றும் மக்களை வழிநடத்தினார், இறுதியில் பிரித்தானியர் இந்திய மக்கள் அவர்களின் விருப்பிற்கு மாறாக ஆளப்படமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டு வெளியேறினார்கள்

அதன் பின்பு “இந்தியாவை விட்டுவிடு” இயக்கம் உருவானது.அவர் பிரித்தானியர் இந்தியாவை விட்டுவிடுப்படிக்கு வலியுறுத்தினார். அவர் பிரித்தானியர்களுக்கு  இந்தியாவில் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை என்றும், இந்தியாவின் ஆட்சி இந்தியர்களின் கரங்களில் கொடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

ஆனால் வின்சென்ட் சேர்ச்சில் தலைமையில் இருந்த பழைமைவாத கட்சி அரசாங்கம் அவரது இந்த கோரிக்கையை எதிர்க்க முற்பட்டது. ஆனால் 40ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தேர்தலில் பழமைவாத கட்சியின் தோல்வியும் தொழிற்கட்சியின் வெற்றியும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த வட்டமேசை பேச்சுக்களுக்கும் கருத்தரங்கிற்கும் வழிசமைத்தது.

ஐயா, மஹாத்மா தன்னுடைய அஹிம்சை வழியிலான சமூக ஒத்துழையாமை மற்றும் சத்தியாகிரக போராட்டங்களை இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு முன்னர்,ஒரு இளம் வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்த போது, அங்கு இடம்பெற்ற நிறவெறிக்கெதிரான போராட்டங்களில் இந்தியர்களையும் தென்னாபிரிக்க மக்களையும் வழிநடத்தினார். 

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் முழு உலகத்தின் கவனத்தினையும் ஈர்த்தது.அது என்னவெனில், நிற ஒடுக்குமுறையை எதிர்த்து காந்தி அவர்கள் வெள்ளையர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க வெள்ளை நிற ஆட்சியை பிரதிபலித்த ரயில் பெட்டியில் பயணம் செய்தபோது அவர் ரயிலில் இருந்து வெளியே பாதையில் தூக்கி எறியப்பட்ட சம்பவமாகும்.

ஐயா, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று சிறிது காலத்தின் பின்னர், இந்தியாவின் லோக் சபா, மற்றும் ராஜ்ய சபா ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆற்றிய உரை என் ஞாபகத்திற்கு வருகிறது, 

அவர் கூறியதாவது “மஹாத்மா காந்தி வெள்ளையர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாளிலிருந்தே வெள்ளை மாளிகைக்கான எனது பயணம் ஆரம்பமானது” என்பதாகும் . எனவே ஐயா, காந்தி அவர்களின் தாக்கம் இந்தியாவிற்ற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மாறாக அவரது ஆதிக்கம் முழு உலகத்தினையும் ஆட்கொண்டது. 

ஆசியாவில் உள்ள இலங்கை உட்பட அநேக நாடுகளின் சுதந்திரத்திற்கு மூல காரணமாக அமைந்தவர் மஹாத்மா காந்தி, எனவே நாம் அனைவரும் இந்த இந்திய மகனின் வன்முறையற்ற சத்தியாகிரக, உண்மை,மற்றும் சமூக ஒத்துழையாமை கொள்கைக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்,அவர் இந்த முறைமையின் மூலம் சாதாரண மனிதனும் அநீதிக்கெதிராக, ஒடுக்குமுறைக்கெதிராக,சமத்துவமின்மைக்கு எதிராக போராட முடியும் என்ற சிந்தனையை நிலைநாட்டினார்.

ஐயா அவர் இந்தியாவை ஐக்கியப்படுத்தினார், இந்தியாவை ஒன்றிணைத்தார், இந்தியா பாரிய நாடு, தற்போது அதன் ஜனத்தொகை 1,000,200,00. இந்தியாவில் பெரிய பிராந்தியங்களும்,சிறிய பிராந்தியங்களும் உள்ளன.அவர் அவர்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்தினார், பெங்காளி,பஞ்சாபி,தெலுங்கு,மலையாளி,தமிழன் எவராக இருந்தாலும் முதலாவது அவர்கள் தம்மை இந்தியன் என்றே கூறிக்கொள்வார்கள்.

மஹாத்மா காந்தி அவர்களை ஒன்றிணைத்தார்.மஹாத்மா காந்தி இந்தியர்களுக்கு சொந்தமான இந்தியாவை ஒன்றிணைத்து இந்திய மக்கள் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு வழிசமைத்தார்.அவர்களது சொந்த அடையாளம் தனிப்பட்ட அடையாளம் பின்னரே காணப்பட்டது. பிரதமர் கூறியதைப்போன்று அவர் வெறுமனே ஒரு அரசியல் சுதந்திரத்தினை கொண்டு வருவதற்கு மாத்திரம் பொறுப்பாளியாக இல்லாமல் இந்திய மக்களின் தன்னிறைவிற்கும் காரணாமாக அமைந்தார். அதனை செய்வதில் ஒரு பாரிய பங்களிப்பினை செய்தது மாத்திரமன்றி, மொழி அடிப்படியில் பிராந்தியங்களை அடையாளம் கண்டு அவற்றை மொழி அடிப்படையில் பிரித்தது மாத்திரமன்றி இந்த மொழி அடிப்படையிலான பிராந்திய பிரிவுகள் எந்தவகையிலும் இந்தியாவின் அடையாளத்தினை பாதிக்காமல் பார்த்துக்கொண்டார். 

இந்தியாவின் அடையாளத்தினை பாதுகாத்ததின் நிமித்தம், அவர், எல்லா இந்தியர்களும் தமது சொந்த மொழிகளோடு,சொந்த கலாச்சாரங்களோடு,சொந்த நாகரீகங்களோடு,சொந்த வரலாற்றோடு அவர்களது சுதந்திரத்தினையும் தனித்துவத்தினையும்,அடையாளத்தினையும் தமது சொந்த மாநிலங்களிலே பாதுகாத்து கொள்ளும்படியிலான ஒரு நிலைமையை உருவாக்கினார். இது இந்திய மக்களுக்கு மஹாத்மா காந்தி செய்த அளப்பெரிய சேவையாகும்.

ஐயா எமது நாட்டினையும் எமது சூழ்நிலையினையும் நோக்கும் போது, இதனை நான் கூறியாக வேண்டும், 1977ம் ஆண்டு ஜே ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐ.தே.கட்சி அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட போது, நாங்கள் வடக்கு கிழக்கிலிருந்து பெரும் எண்ணிக்கையில் இந்த பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காலங்களில் , மஹாத்மா காந்தி கற்பித்த  ஹிம்சை,சத்தியாகிரகம்,மற்றும் சமூக ஒத்துழையாமையை நாங்கள் அனைவரும் கடைப்பிடித்திருந்தால்,இந்த நாட்டில் இடம்பெற்ற ஆயுத போராட்டத்தினை தவிர்த்திருக்கலாம் என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

1977ல் வடக்கு கிழக்கிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். நாம் வடக்கு கிழக்கிலுள்ள சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ஒரு ஆசனத்தினை தவிர ஏனைய அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தோம். இலங்கை அரசிற்கு எதிராக அகிம்சை,சத்தியாகிரகம்,உண்மை மற்றும் சமூக ஒத்துழையாமை போன்றவற்றின் அடிப்படையில் எமது போராட்டத்தினை நடாத்தியிருந்தால் ஆயுத போராட்டத்தினை தவிர்த்திருப்பது மாத்திரமன்றி எமது இடங்களிலே சுயாட்சியையும் வன்முறையில்லாமல் அடைந்திருக்கலாம். அப்படியான நடவடிக்கையில் ஈடுபடாமை ஒரு தவறு என்று நான் கருதுகிறேன். 

எனது எதிர்பார்ப்பு மீண்டும் எமது நாட்டில் ஒரு வன்முறை ஏற்ப்படாமல் நாம் அனைவரும் மஹாத்மா  காந்தியின் படிப்பினையை ஏற்று நடக்கவேண்டும் என்பதாகும். தேசிய பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியின்படி சரியான முடிவினை தராத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வரையில் வன்முறைக்கு பதிலாக சத்தியாகிரகம், அஹிம்சை வழியிலான உண்மை மற்றும் சமூக ஒத்துழையாமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

ஐயா, இந்தியாவின் திசையினை மாத்திரமல்லாமல் முழு உலகத்தின் நடவடிக்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்த மஹாத்மா காந்தி குறித்து எமது மரியாதையையும் மதிப்பினையும் எடுத்துக்காட்ட இந்த சந்தர்ப்பத்தினை இந்த பிரேரணையை கொண்டுவந்ததன் மூலம் எமக்கு வழங்கிய பிரதமருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13