“ரோ“ மீது சிறிசேன குற்றச்சாட்டு வதந்தியை பரப்பியது யார்- இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்

Published By: Rajeeban

20 Oct, 2018 | 12:18 PM
image

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால   சிறிசேன  தன்னை கொல்வதற்கான சதி முயற்சியில் ரோ ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாகயிருக்கலாம் என இந்தியாவின்  எகனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி  எகனமிக் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளே காரணமாகயிருக்கலாம் என எகனமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கும்  இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இடையில் உள்ள நல்லுறவை குழப்பும் முயற்சியாகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும்  எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இரு அரசாங்கங்களிற்கும் இடையிலான உறவு எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றது என்பதே மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையை சாத்தியமாக்கும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி  சிறிசேன- ரோ குற்றச்சாட்டு குறித்த வதந்தியை பரப்பியிருக்கலாம் என இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்தியாவிற்கு இடையில் நல்லுறவை விரும்பாத சக்திகளிடமிருந்தே இந்த வதந்தி உருவாகியிருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பிரதமர் இ;ந்திய பிரதமரையும்  பாதுகாப்பு வட்டாரங்களை சேர்ந்தவர்களையும் சந்திக்கும்போது இந்த விடயம் பிரதானமாக ஆராயப்படும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு இலங்கை பிரதமர் விஜயம் மேற்கொள்ளும்போது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என முதலில் திட்டமிடப்பட்டிருக்கவில்லை எனினும் ரோ குறித்த குற்றச்சாட்டுகளிற்கு பின்னர் அவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41