இங்கிலாந்து கால்பந்து  வீரர் அடம் ஜோன்ஸன் பாடசாலை மாணவிகளுடன் பாலியல் உறவுகளை மேற்கொண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கியதால் அவரது காதலி 13 மாத குழந்தையுடன் பிரிந்து சென்றுள்ளார்.

இங்கிலாந்து கால்பந்து  வீரர் அடம் ஜோன்ஸன், 15 வயது பாடசாலை மாணவி ஒருவரோடு பாலியல் உறவு கொண்டுள்ளார். குறித்த மாணவியுடனான பழக்கத்தில்  பல பாடசாலை மாணவிகளோடு அவர் பாலியல் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அடம் ஜோன்ஸன் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஜோன்ஸன் மீதான குற்றம் தற்போது உறுதியாகியுள்ள நிலையில், தான் மாணவிகளோடு பாலியல் தொடர்புகளை பேணவில்லையெனவும்,  அவர்களை முத்தமிட்டுள்ளேன் என்றும் ஜோன்ஸன் கூறியுள்ளார். 

ஆனால் அவர்களில் ஒரு மாணவி, அடம் ஜோன்ஸன் தன்னோடு பாலியல் உறவு கொண்டார் என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

பாலியிலுக்காக வயது குறைந்த பெண்களோடு ஜோன்ஸன் தொடர்பு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையிலேயே அடம் ஜோன்ஸனின் காதலி 13 மாத குழந்தையோடு பிரிந்து சென்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது.