இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது- மகேல கவலை

Published By: Rajeeban

20 Oct, 2018 | 10:33 AM
image

இலங்கையில் கிரிக்கெட் பின்னோக்கி செல்கின்றது என முன்னாள் அணித்தலைவர் மகேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது இருக்குமிடத்திலிருந்து பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம்   என தெரிவித்துள்ள மகேல ஜயவர்த்தன நாங்கள் தற்போது மிகவும் கீழே உள்ளோம்  தரவரிசைப்பட்டில் இதனை  தெளிவாக புலப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டநிர்ணய சதி குறித்து இலங்கை இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை இந்த விடயத்தில் இலங்கை ஒத்துழைக்க மறுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த நிலை எதனை நோக்கி நகர்கின்றது என நாங்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது இந்த நிலை ஏமாற்றமளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்காக தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள்  என எதிர்பார்க்கப்பட்டவர்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை  இது ஏமாற்றமளிக்கின்றது எனவும் மகேலஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை முழுமையாக சுத்தம்செய்யவேண்டும் இதுவே ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டநிர்ணய சதி போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமானால் அணிவீரர்களின் ஓய்வறையில் நம்பிக்கை தென்படாது எனவும் குறிப்பிட்டுள்ள மகேல ஜயவர்த்தன இந்த விடயத்தில் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணி முகாமைத்துவத்திற்கும் முக்கிய கடப்பாடு உள்ளது  அவர்களும் இதனை முற்றாக அகற்ற முயலவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை சுத்தம்செய்யும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் ஏழு எட்டு மாதங்கள் காத்திருக்க முடியாது  எனவும் மகேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்

இந்த நடவடிக்கைகளை தாமதப்படுத்தினால் அது அணியை மிக மோசமாக பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர் அணியில் பல இளம் வீரர்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அணி பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தியது அவர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் அவர்களை அணியிலிருந்து நீக்கியது  இதன் காரணமாக வீரர்கள் மத்தியில் குழப்பநிலை காணப்பட்டது நானும் அணியிலிருந்து நீக்கப்படுவேனா என அவர்கள் அஞ்சுகின்றனர் எனவும் மகேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்கள் இயல்பாகவே சுயநலம் மிக்க விதத்தில் விளையாடுகின்றனர் அணிக்கு எப்படி வெற்றியை தேடித்தருவது என அவர்கள் சிந்தித்து அதற்கேற்ப விளையாடுவதில்லை இதற்காக அவர்களை குற்றம்சாட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35