சோகத்தில் முடிந்த தசரா விழா ; 60 பேரை பலியெடுத்த ரயில் விபத்து (வீடியோ இணைப்பு)

Published By: Digital Desk 4

20 Oct, 2018 | 09:29 AM
image

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்று இரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27 ஆம் எண் ரயில் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.

இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தற்போது பஞ்சாப் ரயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17