தனது ரோல்மொடல் தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். தன்னுடைய சாதனையை தானே முறியடித்த ஜோஸ் பட்லர், தனது ரோல்மொடல் தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இருபதுக்கு - 20 போட்டிகளாலும் டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களாலும் ஒருநாள் போட்டியின் போக்கு தற்போது முழுமையாக மாறிவிட்டது.

ஒவ்வொரு வீரரும் அவரது அதிரடியை பின்பற்ற விரும்பும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா?

மேலும் அவரது ஆட்டத்திறமை என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த மாதிரியான ஆக்ரோஷமான வீரரை பார்க்கும் போது அவரையே பின்பற்றத் தோன்றும் என அவர் தெரிவித்துள்ளார்.