நோர்வூட் பிரதேசத்திற்கான மாற்று பாதையை அமைக்க திட்டம்:பழனி திகாம்பரம்

Published By: R. Kalaichelvan

19 Oct, 2018 | 04:56 PM
image

கடந்த வாரம் மண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் இன்று ஆரம்பித்து வைத்தார்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான காணியையும் பார்வையிட்டார். 

இது தொடர்பான கூட்டம் டிக்கோயா “ட்ரஸ்ட்” தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அரசாங்க அதிபர் ரோகன புஷ்பகுமார, உதவி அரசாங்க அதிபர் ஏ. சுமனசெகர, பெருந்தெருக்கள் திணைக்களத்தின் பிரதான பொறியிலாளர் திலகரத்ன,தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் பிரதான பொறியியலாளர் கலாநிதி ஜெயதிஸ்ஸ, மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.இதில் அமைச்சர் திகாம்பரம் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நோர்வூட் பிரதேசத்தில் பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக இப்பிரதேசத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலமாக நோர்வூட், மஸ்கொலியா, பொகவந்தலாவ, சாமிமலை, ஆகிய பிரதேசத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து இன்றி பெரிதும் பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கிய தோடு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு உள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் தங்களது கல்வி நடவடி்ககைகளை சீராக முன்னெடுக்க முடியவில்லை. இப்பாதையினூடாகவே அனைத்து மக்களும் போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

இது தொடர்பாக பாதையை உடனடியாக புனரமைத்து மக்களுடைய போக்குவரத்து சேவைகளை தொடர்வதற்கு உடனடியாக மண்சரிவில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் புதிய பாதை ஒன்றினை ஏற்படுத்துவதற்கு மாவட்ட செயலாளரிடம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதன் காரணமாக வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையோடு இப்பதையை ஆரம்பிக்குமாறு அறிவித்தலுக்கமைய இன்று பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ளேன். இப்பாதையை புனரமைப்பதற்கு என்னால் உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியும்.மற்றவர்களுடைய விடயங்கள் எனக்கு தேவையில்லை.

சிலர் அரசியல் நாடகம் ஆடுகின்றார்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, படிக்கட்டுக்கு அடிக்கல் நாட்டலாம், பாதைக்கு அடிக்கல் நாட்டலாம். கறுப்பு உடை அணியலாம். அது அவர்களின் இஷ்டம். இதை பற்றி நாம் யோசிக்க தேவையில்லை. மக்களுடைய அபிவிருத்தியை கருத்திற் கொண்டு நாங்கள் செயற்படுகின்றோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50