66 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மீட்பு

Published By: Daya

19 Oct, 2018 | 03:21 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

சுமார் ஒரு வருட காலத்திற்கு முன்னர் வத்தளை பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு டுபாயிலிருந்து இரண்டு கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்வதற்கு எவரும் வராத காரணத்தால் சுங்க அதிகாரிகள் அதனை சோதனை செய்துள்ளனர். 

மேற்படி  பொதிகளுக்கு   ஒருவருட காலமாக  யாரும் உரிமை கோராமையை அடுத்து நேற்று   சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பான முறையில் பொதி செய்யபட்டிருந்த  ஒரு சிகரெட்  பொதியிலிருந்து 27 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான   227 சிகரெட் பெட்டிகளும்   38 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 385  சிகரெட் பெட்டிகளுமே இவ்வாறு  கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன் சிகரெட் பொதிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14