தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் ; ஜனாதிபதியையடுத்து தொழில் அமைச்சரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி 

Published By: R. Kalaichelvan

19 Oct, 2018 | 12:15 PM
image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்வைத்து மலையகமெங்கும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நேற்று தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் அமைச்சு காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் , பிரதி தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி. இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீரவுடன் தொழில் திணைக்கள ஆலோசகரும் கலந்து கொண்டிருந்தார்.

இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பழனிதிகாம்பரம், 

தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை எடுத்துக்கூறியதோடு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் தொழில் அமைச்சரை சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கையின் நியாயங்களை எடுத்துரைத்தோம்.

தோட்டக் கம்பனிகள் தொடர்ந்தும் தாம் நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க மறுத்து வருகின்றன. தற்போது ஐநூறு ரூபா மாத்திரமே அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகின்றது. 

எனினும் கம்பனிகள் வெறும் 100 ரூபாவை மாத்திரமே அடிப்படை சம்பளமாக உயர்த்த முன்வந்துள்ளன.இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்று நடாத்திய காலத்தில் தோட்டப்பகுதி உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கமே செய்து கொடுத்தது. 

எனினும் தற்போது பிராந்திய கம்பனிகளுக்கு கீழ் தனியாருக்கு வழங்கியதன் பின்னர் அவர்கள் எவ்வித உட்கட்டமைப்பு பணிகளிலும் தமது முதலீடுகளை செய்வதில்லை.

அரசாங்கமே அனைத்து உட்கட்டுமான வசதிகளையும் வழங்கி வருகிறது. எனவே அதற்காக கம்பனிகள் செலவிட்டிருக்க வேண்டிய தமது இலாப பகுதியை தொழிலாளர்களுக்கு சம்பளமாக பகிர்ந்தளிப்பதே முறையாகும்.

இந்த நிலைமைகளைப் புரிந்து கொண்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தொழில் அமைச்சர் தலையீடு செய்து நியாயமான அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம் .

எமது கோரிக்கைகளை செவிமடுத்த தொழில் அமைச்சர் தொழில் ஆணையாளரையும் அழைத்து அவரது கருத்துகளையும் கேட்டறிந்தார்.

முதலாளிமார் சம்மேளனபிரதிநிதிகளை தாம் சந்திக்கவுள்ளதாகவும் அவர்களுடன் கலந்து பேசி நியாயமான அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க தான் அவர்களுக்கு போதுமான அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனம் தமது முன்மொழிவுகளில் தொழிலாளர்களுக்கு தாம் பங்களிப்பாக வழங்கும் ஊழியர் சேமலாப நிதியத் தொகையையும் சேர்த்து பெறுமதி உயர்வாக காட்டுவது அநாகரீகமானது மட்டுமல்ல தொழில் உரிமையை மீறும் செயல் என்பதையும் தொழில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டிய தமிழ் முற்போக்கு கூட்டணியினர் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அது தொடர்பில் போதிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44