என்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார்

Published By: Vishnu

18 Oct, 2018 | 06:03 PM
image

கடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டினேஷ் கனேரியா விளையாடினார். 

அப்போது அனு பாட் என்ற சூதாட்ட தரகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கனேரியாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் வெஸ்ட்பீல்ட் சூதாட்ட சர்ச்சை காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கனேரியாவை இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணைக்குட்படுத்தியதைத் தொடர்ந்து, கனேரியா பாகிஸ்தான் அணியில் இருந்துநீக்கப்பட்டார். 

மேலும் இங்கிலாந்து கவுண்டி போட்டியில் விளையாட வாழ்நாள் தடைவிதித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை கனேரியாவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தடை விதித்தது.

ஆனால், டினேஷ் கனேரியா தான் ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். கனேரியாவுக்கு அடுத்து சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமிர், ஆகியோருக்கு 5ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதில் முகமது அமிர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்குள் இணைந்துகொண்டார். சல்மான்பட், முகமது ஆசிப் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

கனேரியா மாத்திரம் தான் குற்றமற்றவர் என்று கூறி வந்த நிலையில்,  அல்ஜஸிரா தொலைக்காட்சியில் கனேரியா இது தொடர்பில் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.

இதன்போது, 6 ஆண்டுகளுக்குப் பின் தான் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை என்று ஒப்புக்கொண்டார். இதைக் கேட்டதும் இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கனேரியா மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள், என்னுடைய ரசிகர்கள், பாகிஸ்தான் மக்கள் அனைவரும் எனது சூழலை புரிந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள்.

நான் சூதாட்ட தரகர் அனு பாட்டுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நான் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்னை மன்னித்து விடுங்கள். அதற்கான விலையைக் கடந்த 6 ஆண்டுகளாக நான் கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் அப்துல் லத்தீப் கூறுகையில், 

நான் கனேரியா குற்றமற்றவர் என்று இத்தனை நாட்களும் நம்பிக்கொண்டிருந்தேன். அவரின் ஒப்புதல் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று தெரிவித்தார்.

டினேஷ் கனேரியா பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் இதுவரை 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35