"பிரதமரின் அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை”

Published By: Digital Desk 7

18 Oct, 2018 | 04:56 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

"பிரதமரின் அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அவர் எந்த பத்திரத்தையும் சமர்ப்பித்திருக்கவும் இல்லை. அத்துடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி தொடர்பில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட  அமைச்சரவை பத்திரம் தொடர்பாகவே ஆராயப்பட்டது" என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடகப்பேச்சாளரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

"அமைச்சரவை கூட்டத்தின்போது துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அமைச்சரவைக்கு பிரதமர் எந்த பத்திரத்தையும் சமர்ப்பித்திருக்கவில்லை. 

ஆனால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் துறைமுகத்தின் கிழக்கு பகுதி தொடர்பாக நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தேன். அந்த பத்திரம் தொடர்பாகவே அன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது." என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46