கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

18 Oct, 2018 | 03:05 PM
image

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் தமது சக மாணவியின் மரணச் சடங்கிற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் கொடுக்காதமையினைக் கண்டித்து கிழக்குப் பல்லைக் கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழக நிர்வாக கட்டடத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்ட மாணவர்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 15 ஆம் திகதி கிழக்குப் பல்லைக் கழகத்தின் கலை காலாசார பீட யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்த  டனியல் சில்வேவியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

குறித்த மாணவியின் மரண வீட்டிற்குச் செல்வதற்காக கலை காலாசார பீட மாணவர்கள் பீடாதிபதி ஊடாக செவ்வாய்கிழமை போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வெளிநாடு சென்றுள்ளதால் பிரதி உபவேந்தரிடம் குறித்த கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கையினை பல்கலைக் கழக நிர்ருவாகம் ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவித்திருந்தது.

நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டினைக் கண்டித்தும் வருங் காலங்களில் மாணவர்களைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற காரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு போரட்டம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14