இலங்கையில் பலரை விசாரணை செய்கின்றோம்- ஐ .சி.சி. அதிகாரி அதிர்ச்சித் தகவல்

Published By: Rajeeban

18 Oct, 2018 | 01:06 PM
image

ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கையில் பலரை விசாரணை செய்து வருகின்றனர் என அதன் தலைவர் அலெக்ஸ் மார்சல் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் ஊருடுவி அதற்கும் இளம் வீரர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் என்ற நச்சுவட்டத்தை உடைக்க முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கின்போவுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேட்டடியின் வடிவம் வருமாறு,

கேள்வி - இலங்கையில் தனது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏன் தீர்மானித்தது?

அலெக்ஸ் மார்சல்- இலங்கை உட்பட பல நாடுகள் குறித்து எங்களிற்கு பெருமளவு அறிக்கைகள் கிடைத்துள்ளன. நாங்கள் பெருமளவு விசாரணைகளை மேற்கொள்வது இந்த நாடுகளின் அமைப்பில் ஊழல்கள் காணப்படுவதை புலப்படுத்துகின்றது. 

நான் கரிசனை கொண்டுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த ஒரு வருடங்களில் இலங்கை குறித்தே நாங்கள் அதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் இலங்கை குறித்து 12 விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு அடுத்தபடியாக சிம்பாப்வே குறித்து அதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

ஊழல் என்பது திட்டமிடப்பட்ட குற்றத்துடன் தொடர்புபட்டதாக காணப்படலாம்.இதன் காரணமாக நாங்கள் இளம் வீரர்கள் மற்றும் பெண் வீராங்கனைகள் குறித்து அதிக கவலை கொண்டுள்ளோம்.தனக்குள்ளே ஊழலை உள்ளடக்கியுள்ள அமைப்பு முறையால் இவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

தேசிய அணிக்குள் நுழையும் இளம் வீரர் ஒருவர் அதிகாரம் உள்ளவர்களால் நெருக்கடியான நிலைக்குள்ளாகும் சூழலை தடுப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டுள்ளேன்.

இளம் வீரர்கள் ஊழல்களில் ஈடுபடமாட்டோம் என எதிர்த்தால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில விளையாட முடியாத நிலையும் அதற்கு இணங்கினால் தொடர்ந்து விளையாடக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

இளம் வீரர்களாகயிருந்தவேiயே ஊழலில் ஈடுபட்டவர்கள் அணிக்குள் வருவது குறித்தும் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.இவர்கள் பின்னாளில் இளம் வீரர்களை ஊழல்களில் ஈடுபடுத்தலாம்.

ஆகவே அமைப்புமுறைக்குள் காணப்படும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகம் தொடர்பான விடயம் தொடர்பானது. நான் இந்த நச்சுவட்டத்தை உடைத்து இளம் வீரர்களை காப்பாற்ற  விரும்புகின்றேன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி - சமீபத்தில் நீங்கள் இலங்கை இங்கிலாந்து வீரர்களுடன் கலந்துரையாடினீர்கள். இதற்கு விசேட காரணம் ஏதாவது உள்ளதா?

பதில்- முதலில் இது தற்போது இடம்பெறும் இங்கிலாந்து இலங்கை தொடர்பானது இல்லை. கிரிக்கெட் உலகில் தீவிரமாக ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் படங்களை நாங்கள்  வீரர்களிடம் காண்பித்தோம்.

இதன் மூலம் நாங்கள் ஊழலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளோம். நாங்கள் அவர்களின் படங்களை காண்பித்து பெயர் விபரங்களை தெரிவித்துள்ளோம். இதன் மூலம் வீரர்களிற்கு சிறந்த முறையில தகவல்களை வழங்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த நடவடிக்கை ஏற்கனவே பலனளிக்க தொடங்கியுள்ளது அணிகளிடமிருந்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கேள்வி- ஊழலில் ஈடுபட்டுள்ள எத்தனை பேரின் தகவல்களை வழங்கினீர்கள்?

பதில்-ஆறு பேரின் தகவல்களை வழங்கினோம்,இதேவேளை 12 முதல் 20 பேரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம்

கேள்வி- அனைவரும் ஆண்களா?

பதில்- நாங்கள் காண்பித்த படத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் சில பெண்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி- அனைவரும் உள்ளுரை சேர்ந்தவர்களா?

பதில் -இலங்கையில் இலங்கையர்களும் இந்தியர்களும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். உலகின் ஏனைய பகுதிகளில் இந்தியாவை சேர்ந்தவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி - ஆகவே உங்கள்  விசாரணைகள் ஆட்ட நிர்ணய சதி முயற்சியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவில்லையா?

பதில்- நாங்கள் பலவகையான ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.நபர்கள் குறித்தே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.

இலங்கையில் கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட பலரை விசாரணை செய்துவருகின்றோம் -இவர்கள் கிரிக்கெட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள்.இவர்கள் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்களாகவும் முன்னாள் வீரர்களாகவும், நிர்வாகிகளாகவும்,சிரேஸ்ட அதிகாரிகளாகவும் இருக்கலாம்.

இலங்கையின் ஜனாதிபதி பிரதமருடனான சந்திப்பின்போது வீரர்கள் அதிகாரிகள் எவருடைய பெயரையாவது நீங்கள் குறிப்பிட்டீர்களா?

பதில்- குற்றச்சாட்டை சுமத்தினால் மாத்திரமே நாங்கள் பெயர் விபரங்களை வெளியிடுவோம். குற்றச்சாட்டு சுமத்தியதும் நாங்கள் அடிப்படை விபரங்களை வெளியிடுவோம்.தீர்ப்பாயத்தில் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னரே முழுமையான விபரங்களை வெளியிடுவோம்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பில் நாங்கள் எந்த பெயர் விபரங்களையும் வெளியிடவில்லை.

(பேட்டியின் தமிழ் வடிவம் வீரகேசரி இணையம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20