வட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்

Published By: Digital Desk 4

17 Oct, 2018 | 09:51 PM
image

வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது என வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது.

அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் கொண்ட குழு குறித்த கிராமங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்றன.

வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வன இலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்திற்குச் செல்வதற்கும் அங்கு மக்கள் மீள் குடியமர்வதற்கும் வன இலாகாவினர் தடையேற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுருந்தது.

ஆகவே அந்தப் பகுதிக்கு வடக்குமாகாண சபை உறுப்பினர்கள் கள பயணம்மொன்றை மேற்கொண்டு உண்மை நிலையை உரிய நடவடிக்கையை முன்னெடுக்கும் வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மாகாண சபையின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்று நிலைமைகளைக் பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தொடர் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் கலந்தலோசித்தனர்.

இதேவேளை தமிழர் பிரதேசங்களில் உள்ள எல்லா காடுகளும் தமக்கு தான் சொந்தம் என்ற அடிப்படையில் சகல காணிகளையும் வன இலாகாவினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ஆகவே தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்கு இருக்கிறது. என அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் சபையில் தெரிவித்திருந்தபோதிலும் , 38 வடமாகாண சபை உறுப்பினர்களில் 12 பேரே அக்கிராமங்களுக்கு சென்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55